twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 மணி நேரம் காத்திருப்பு..அன்புச்செழியன் சகோதரர் வீட்டைத்திறந்த அதிகாரிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி

    |

    நான்கு மணி நேரம் காத்திருந்தும் கதவு திறக்காததால் கோர்ட்டு உத்தரவை பெற்று பூட்டை உடைப்போம் அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் கதவு திறக்கப்பட்டது.

    அன்புச்செழியன் சகோதரர் அழகர்சாமியின் இல்லத்திற்கு ரெய்டுக்குச் சென்ற அதிகாரிகள் சாவி இல்லாததால் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    சாவி கிடைத்ததும் கதவை திறந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சுவாரஸ்யமான அதிர்ச்சி.

    ரெய்டு நடக்கும் தயாரிப்பாளர்களின் சினிமா வாழ்க்கை...ஓர் ரவுண்ட் அப் ரெய்டு நடக்கும் தயாரிப்பாளர்களின் சினிமா வாழ்க்கை...ஓர் ரவுண்ட் அப்

    பிரபலமான அன்புச் செழியன்

    பிரபலமான அன்புச் செழியன்

    தமிழக திரைத்துறையில் மிகப்பெரிய பைனான்சியர் என்றால் அன்புச்செழியன் எனலாம். அன்புச்செழியன் தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு நிதி உதவி அளிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் முன்னணியில் இருந்து வருபவர். கோபுரம் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அன்புச் செழியன் சிக்கி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிகில் படம் இவருடைய விநியோகத்தின் கீழ் வெளியானது. அப்போது இவரது வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. அப்போது 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

    திரைத்துறையினர் வீடுகளில் ரெய்டு

    திரைத்துறையினர் வீடுகளில் ரெய்டு

    இந்நிலையில் தமிழக திரைத்துறையைச் சார்ந்த முக்கிய தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் பைனான்சியர்கள் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். பைனான்சியர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன், 2டி நிறுவன லட்சுமணன், மன்னர் உள்ளிட்ட பலர் அலுவலகங்கள், வீடுகளில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. அன்புச்செழியன் வீடு அலுவலகங்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில், சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.

    அழகர்சாமி இல்லத்தில் வீட்டை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள்

    அழகர்சாமி இல்லத்தில் வீட்டை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள்

    சென்னை தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் அன்புச் சகோதரர் அழகர்சாமி வீடு, அலுவலகங்களிலும் இந்த ரெய்டு நடக்கிறது. மதுரையில் அன்புச்செழியன் சம்பந்தப்பட்ட வீடு. அலுவலகங்கள் அவரது மகள். தம்பி அழகர்சாமி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் சகோதரர் அழகர்சாமி இல்லத்தில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்த சென்றனர். அழகர்சாமியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. ரெய்டு பற்றி அறிந்து வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் தங்களிடம் சாவி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    எச்சரித்த அதிகாரிகள் உடனடியாக வந்த சாவி

    எச்சரித்த அதிகாரிகள் உடனடியாக வந்த சாவி

    காலை 7 மணிக்கு அங்கு காத்திருந்த அதிகாரிகள் பொறுமையிழந்தனர். 4 மணி நேரத்திருக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அதிகாரிகள் பொறுமையிழந்து ஊழியர்களிடம் சாவியை கேட்டுள்ளனர். ஊழியர்கள் தங்களிடம் சாவி இல்லை என்று கூறிய நிலையில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அதிகாரிகள் ஒழுங்காக சாவியை பெற்று தராவிட்டால் நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து வீட்டை திறந்து சோதனையிடும் நிலை ஏற்படும். இதனால் மேலும் சிக்கல்களை அனுபவிப்பீர்கள் என்று எச்சரித்தனர்.

    சாவி வந்தது பூட்டை திறந்த அதிகாரிகள்

    சாவி வந்தது பூட்டை திறந்த அதிகாரிகள்

    இதை எடுத்து யாரிடமோ போனில் பேசிய ஊழியர்கள் சிறிது நேரத்தில் வீட்டின் சாவியைக் கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் பூட்டை திறந்து உள்ளே சென்று ரெய்டு நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் பொதுவாக ரெய்டு நடக்கும் இடங்கள் குறித்து முடிவு செய்துவிட்டு ஒரே நேரத்தில் வேலையை தொடங்குவார்கள். அவ்வாறு செல்லும் போலீசார் துணையுடன் ரெய்டு நடத்துவார்கள். இதில் வீடு பூட்டி கிடந்தால் சம்பந்தப்பட்டவரை வரவழைத்து பூட்டை திறக்க சொல்வார்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைக்கும் நிலை ஏற்படும்.

    சாவி வந்து பூட்டை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி

    சாவி வந்து பூட்டை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி

    அழகர்சாமி வீட்டு வாசலில் இன்று காலை முதல் காத்திருந்த அதிகாரிகள் எச்சரிக்கை செய்த பின்னரே சாவி வந்தது, அதன் பின பூட்டைத்திறந்து உள்ளேச் சென்ற அதிகாரிகளுக்கு ஒரு புது அதிர்ச்சி காத்திருந்தது. அது வீட்டின் உட்புற கதவுகளுக்கு பூட்டு இல்லை. அதற்கு பதில் நவீன லேசர் டெக்னாலஜி உதவியுடனான லாக் அமைக்கப்பட்டிருந்தது. முகம் கண் விழி அல்லது கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே திறக்கப்படும் வகையில் கதவு அமைக்கப்பட்டிருந்ததால் அதற்கு மேல் என்ன செய்வது என அதிகாரிகளுக்கு தெரியவில்லை. பூட்டிய கதவு முன் அமர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாருடைய கண்விழி, கைரேகை பொருந்தும் என அறிந்து அவர்களை அழைத்து வந்து கதவை திறப்பதற்காக அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    The officers who raided Anbuchezhiyan's brother Alagarsamy's house had to wait for more than 4 hours as they did not have the keys. The key came only after I was finally officers warned to get a court order and break the lock if the key did not come
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X