AR Rahman: இன்னுமா தூங்கி எந்திரிக்கல.. ஏ.ஆர். ரஹ்மானுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள் காரணமாக டிக்கெட்டுகளை வாங்கி ஆசை ஆசையாய் நிகழ்ச்சிக்கு சென்ற பல ஆயிரக் கணக்கான மக்கள் பாதித்த நிலையில், அதற்கு இன்னமும் ஏன் எந்தவொரு ரெஸ்பான்ஸும் பண்ணாமல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளார் என்றும் எழுந்திரியுங்க ரஹ்மான் என ப்ளூ சட்டை மாறன் விளாசி உள்ளார்.
50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை நடத்திய ACTC ஈவென்ட் 5 லட்சம் டிக்கெட்டுகளை ஏமாற்றி வித்துட்டாங்க என பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இது மிகப்பெரிய ஸ்கேம் என்றும் இது எதுவுமே ஏ.ஆர். ரஹ்மானுக்கு தெரியாதா என்ன என ரசிகர்கள் கொந்தளித்து விளாசிய வீடியோ காட்சிகளையும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு ஏ.ஆர். ரஹ்மான் பதில் சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏமாத்திட்டாரு ஏ.ஆர். ரஹ்மான்: சென்னை, பெங்களூரு என பல இடங்களில் இருந்து பனையூரில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசல், டிராபிக் ஜாம், தள்ளு முள்ளு, குழந்தைகள் காணவில்லை என தேடியது, பெண்கள் தவறான சீண்டலுக்கு ஆளானது என இசை கச்சேரி நிகழ்ச்சி கலவர பூமியாய் மாறிப்போன நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் எங்களை ஏமாத்திட்டாரு என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி சரியான திட்டமிடல் இல்லாத காரணமாக பல ஆயிரம் ரசிகர்கள் பரிதவித்து வரும் நிலையில், அவர்கள் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு உரிய பணத்தையும் இழப்பீட்டையும் ஏ.ஆர். ரஹ்மான் சரி செய்தாக வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் வரிசையாக பல ட்வீட்களை போட்டு விளாசி உள்ளார்.
தூங்கியது போதும் எழுந்திரிங்க ரஹ்மான்: நேற்று நள்ளிரவு முதல் ரசிகர்கள் தங்கள் குமுறல்களை சமூக வலைதளங்களில் சொல்லி வரும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியை முடித்த களைப்பில் இன்னுமா தூங்குறீங்க, தூங்கியது போதும் எழுந்திரிங்க பாய் என்றும் ரசிகர்களின் கேள்விக்கு ட்வீட் எல்லாம் போடாமல் அட்லீஸ்ட் ஒரு வீடியோவிலாவது மன்னிப்பு கேளுங்கள் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











