தூங்காதீங்க தில்ராஜு.. முழிச்சுட்டு வந்து படத்தோட அப்டேட் கொடுங்க.. ட்ரெண்டான வாசகம்!
ஐதராபாத் : தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறப்பான படங்களை தயாரித்து வருகிறார்.
தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்சி 15 மற்றும் தமிழில் விஜய்யின் வாரிசு ஆகிய படங்களை தற்போது தயாரித்து வருகிறார்.
இதில் ஆர்சி15 படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய்யின் வாரிசு பம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்மான தகவல்கள் வெளியாகவில்லை. இதுவரை 3 கட்டங்களில் சூட்டிங்கை முடித்துள்ள ந்தப் படம் தற்போது விசாகப்பட்டினத்தில் தனது க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறது.

அப்டேட் கொடுத்த தில்ராஜு
இந்தப் படம் பேமிலி என்டர்டெயினராக உருவாகி வருவதாகவும், ஆனால் விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்டவை இந்தப் படத்தில் சரியாக இருக்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால் தொடர்ந்து படத்ன் எந்த அப்டேட்டும் தெரிவிக்காமல் உள்ளார்.

டைட்டில் அறிவிப்பு
படத்தின் டைட்டிலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி அறிவித்ததோடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் அவ்வப்போது வெளியாகும் விஜய்யின் விமானநிலைய வீடியோக்கள், படத்திலிருந்து லீக்காகும் வீடியோக்களை பார்த்து அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.

ஆர்சி15 படம்
இதனிடையே தெலுங்கில் பான் இந்தியா படமாக உருவாகிவரும் ராம்சரணின் ஆர்சி15 படத்தின் சூட்டிங் ஷங்கர் இயக்கத்தில் விறுவிறுப்பாக சென்று வருகிறது. ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட எதையும் தயாரிப்பு தரப்பு இதுவரை வெளியிடாமல் உள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹீரோவாக காணப்படும் ராம்சரணின் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராம்சரண் ரசிகர்கள் ஏமாற்றம்
இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகிவரும் நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் எதுவும் அறிய முடியாமல் ராம்சரண் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து இன்று #wakeupdilraju என்ற ஹேஷ்டாகை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். தூங்காமல் எழுந்துவந்து ஆர்சி15 படத்தின் அப்டேட்டை தெரிவிக்குமாறு தில் ராஜுவிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அப்டேட் இல்லாத ஆர்சி15
இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஆர்சி15 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. தொடர்ந்து பல ஷெட்யூல்களில் இந்தியாவின் பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துவருகிறது. இதனிடையே இந்தப் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் உள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்
இதையடுத்து தில் ராஜுவை ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். உனக்கெல்லாம் இந்த ப்ராஜக்ட் எதுக்கு என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்யின் வாரிசு படத்தில் குறைந்தபட்சம் டைட்டில் மற்றும் 3 போஸ்டர்கள் வெளியான நிலையில், ஆர்15 படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பது ராம்சரண் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











