எனக்கு கிடைத்த சரியான கதை வால்டர்.. சிபிராஜ் சந்தோஷம்!
சென்னை : வால்டர் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் சில சுவாரசியத் தகவல்களை கூறினார் சிபிராஜ்.
நடிகர் சிபிராஜ் நடிப்பில் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் தான் வால்டர். இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் இதற்கு முன்பே வெளியிடபட்ட நிலையில் சமீபத்தில் படக்குழுவால் நடத்தபட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் மார்ச் 13 வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது .
Recommended Video

இந்த படத்தில் சிபிராஜ் ,சமுத்திரகனி,நட்டி,ஷிரின்,சார்லி,முனீஸ்காந்த்,சனம் ஷெட்டி மற்றும் ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் யு.அன்பு இயக்கியுள்ளார்.படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். படத்தை 11:11 புரொடெக்ஷ்ன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது .

இந்த படத்தின் கதை ஐந்து வருடத்திற்கு முன்பே சிபிராஜிடம் சொல்லபட்டுவிட்டதாம் அதன்பின் கதை பதினோரு முறை மாற்றி எழுதபட்டு அதன் பின் தான் அந்த கதை சரியான தயாரிப்பாளரை சென்றடைந்தது என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிபிராஜ் கூறியுள்ளார் .

மேலும் இந்த படத்தில் நடிகர் நட்டி மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் எவ்வாறு பக்கதுணையாக இருந்ததோ அதே போல தான் வால்டர் படத்திற்கு நட்டி இருந்தார் என்று நட்டியை பற்றி புகழ்ந்து பேசினார் சிபிராஜ். மேலும் என் அப்பா மற்றும் வடிவேலுவை தாண்டி நான் நடிக்க தயங்கியது நட்டியின் முன் தான் என்று கூறினார் சிபிராஜ் .
நான் நிறைய படங்களில் நடித்து இருக்கிறேன் இருந்தாலும் எனக்கு அமைந்ததிலே சிறந்த படம் எது என்றால் அது வால்டர் படத்தை கூறுவேன் என்று சிபிராஜ் கூறியுள்ளார்.மேலும் இதுவரையில் படம் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் சரியான விமர்சனங்களை கொடுத்து வந்த விமர்சகர்களுக்கு நன்றி இந்த படத்திற்கும் சரியான விமர்சனங்களை கொடுக்குமாறு இந்த நிகழ்வில் சிபிராஜ் கேட்டு கொண்டார்.


Click it and Unblock the Notifications











