மீண்டும் வருகிறார் வால்டர்.. அப்பாவுக்கு கிடைத்த வெற்றி .. சிபிக்கு கிடைக்குமா?

சென்னை: சிபி சத்யராஜ், நட்டி, சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்து இருக்கும் திரைப்படம் வால்டர். இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

வால்டர் என்று பெயரை கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது வால்டர் வெற்றிவேல் திரைப்படம் தான். அந்த அளவிற்கு அத்திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சத்யராஜ் வெற்றிவேலாக தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் ஒரு போலீஸ் என்றால் அது வால்டர் வெற்றிவேல் தான் என்று கூறும் அளவிற்கு அமைந்து இருந்தது அந்த திரைப்படம். வால்டர் திரைப்படம் எல்லா போலீஸ் அதிகாரி கதை போல் இருக்காது ஒரு தனி ஸ்டைல் மற்றும் வால்டர் என்ற பெயருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உண்டு.

அறிமுகம்

அறிமுகம்

சிபிராஜ் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இவருக்கு முதல் படம் சற்று சறுக்கிறது. இதனை அடுத்து வரிசையாக 4 படங்களில் தனது அப்பா சத்யராஜ் உடன் இணைந்து நடித்தார் சிபி. இதனை அடுத்து கால்பந்தாட்ட வீரராக லீ படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின் சுமார் மூன்று வருடங்களுக்கு படம் இல்லாமல் இருந்தார் சிபி.

 நெகட்டிவ் ரோலில் நாணயம்

நெகட்டிவ் ரோலில் நாணயம்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய நாணயம் திரைப்படம் மூலம் ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார் சிபி. மீண்டும் ஒரு சிறிய இடைவெளி சினிமாவில் ஏற்பட்டது மீண்டும் இதே இயக்குனருடன் கூட்டணி அமைத்து நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் நடித்தார் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 மீண்டும் வால்டர்

மீண்டும் வால்டர்

தற்போது ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சிபி, தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் வால்டர். இது ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியின் கதை என்று டிரைலரை பார்க்கும் போது தெரிய வருகிறது. சிபிராஜ் இதற்கு முன் ஒரு முழு நீள போலீசாக நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்து இருந்தார். பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே போலீஸ் உடை மற்றும் அதே ஸ்டைல் ஆனால் கதாபாத்திரம் வித்தியாசம். இவரது நடிப்பில் மூன்று வருடங்களுக்கு முன் சத்யா திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 அப்பா பெயரை காப்பாத்துவாரா

அப்பா பெயரை காப்பாத்துவாரா

அப்பா நடித்த படத்தின் பெயரை எடுத்து இவர் வைத்து இருப்பது ஒரு தனி சிறப்பு. படத்தின் பெயருக்கே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கண்டிப்பாக சிபிராஜிற்கு இப்படம் ஒரு நல்ல கம்பெக் படமாக அமையும் என்று பலரின் எண்ணமாக உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இப்படம் திரையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X