டிரெண்டிங் நம்பர் ஒன்.. வால்டர் டீசர்..அதிரடி போலீஸாக சிபி
சென்னை : வால்டர் படத்தின் டீசர் பல லட்சம் மக்களால் பார்க்கபட்டு தற்போது டிரெண்டிங் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது.
இந்த தகவலை சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.2003 ம் ஆண்டு வெளியான ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிபி சத்யராஜ். ஆனால் அந்த படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைய வில்லை. அவருக்கு அந்த படம் தோல்வி படமாகவே அமைந்ததது.

அடுத்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் போன்ற படங்களில் நடித்து உள்ளார். கடைசியாக சத்யா படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து தற்போது யு.அன்பு இயக்கத்தில் சிபி நடித்து வரும் படம் தான் வால்டர்.
வால்டர் வெற்றிவேல் என்ற தலைப்பில் சத்யராஜ் நடிப்பில் 1993ல் ஒரு படம் வெளியாகியது, அதிலும் சத்யராஜ் போலீஸாக நடித்து அசத்திருப்பார். இன்றளவும் பலரால் அந்த கதாபாத்திரம் படத்தை தொலைகாட்சியும் ஒளிப்பரப்பும் போது கண்டு வருகின்றனர் .அதே போல் போலீஸ் கதாபாத்திரத்தில் சிபிராஜ் அசத்தி இருக்கும் படம் தான் வால்டர் .
வால்டர் படத்தின் முன்னோட்டம் வெளியிடபட்டது .இதனையடுத்து தற்போது இந்த முன்னோட்டம் பல லட்சம் மக்களால் பார்க்கபட்டு தற்போது டிரெண்டிங் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது .இந்த தகவலை சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த முன்னோட்டத்தை இதுவரையிம் 3லட்சத்து 40ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ள தகவலையும் அதனுடன் இணைந்து இருக்கிறார் சிபி சத்யராஜ் .
முன்னோட்டத்தை பார்க்கும் போது ஒரு அதிரடி போலீஸாகவும் ஆக்சன் காட்சிகள் நிரைந்த படத்தில் மாஸாக நடித்து இருக்கிறார் சிபிராஜ் என்று தெரிகிறது. இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்களும் நடித்து உள்ளனர் .இந்த படத்தை ஸ்ருதி திலக் தயாரித்து உள்ளார் .
இந்த படத்தில் சிபி சத்யராஜ், சமுத்திரகனி ,நட்டி, சிரின் காஞ்ச்வாலா,சார்லி ,அனி சேட்டா,சனம் ஷெட்டி ,ரித்விகா,அபிசேக் மற்றும் யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்தை யு.அன்பு இயக்கி இருக்கிறார் .படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார் .
சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை மற்றும் ஜாக்சன் துரை படத்திற்கு பிறகு இந்த படத்தில் போலீஸாக நடித்து இருக்கிறார் .நாய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒரு நாயுடன் சேர்ந்து வில்லனை அளித்து இருப்பார் அது வித்தியாசமாகவும் புதுமையாகவும் அமைய அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது .ஆனால் ஜாக்சன் துரை படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் வெற்றி பெற வில்லை .
தற்போது சமூக வலைதளங்களில் முழுக்க தளபதியின் மாஸ்டர் பற்றி ரசிகர்கள் பேசி வந்தாலும் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை வால்டர் பிடித்திருப்பது மகிழ்ச்சி தான் .தளபதி ரசிகரான சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் டீபியை மாற்றி மாஸ்டர் பட முதல் பார்வை போஸ்டரை வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











