சொன்னது ஓவியா ஆனால் செய்றது ஹரிஷ் கல்யாண்
Recommended Video

சென்னை: ஓவியா தனது ரசிகர்களிடம் தெரிவித்த ஒரு விஷயத்தை ஹரிஷ் கல்யாண் செய்ய உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் ஓவியா. ஓவியாவுடன் பேச அவரது ஆர்மிக்காரர்கள் பேராவலுடன் உள்ளனர். இதையடுத்து தங்களின் விருப்பத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்தனர்.
அந்த கோரிக்கை ஓவியாவின் கண்ணிலும் பட்டது.

வாக்குறுதி
லைவ் சாட் செய்ய ரசிகர்கள் விரும்புகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நிச்சயம் சாட் செய்கிறேன் என்று ஓவியா வாக்குறுதி அளித்ததோடு சரி.

மகிழ்ச்சி
தல பாட்டுக்கு ஓவியா டான்ஸ் ஆடியதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தல பாட்டுக்கு ஆட நேரமிருக்கு எங்களுடன் சாட் செய்ய இல்லையோ என்று சில ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
டார்லிங்
ரசிகைகளின் டார்லிங்காக இருக்கும் ஹரிஷ் கல்யாணிடமும் சாட் செய்ய பலர் விரும்பினர். இதையடுத்து அவர் இன்று இரவு 8 மணிக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

ஆர்மி
ஹரிஷை பாருங்க சமத்தா லைவ் பண்ணப் போகிறாரு ஆனால் தலைவிக்கு மட்டும் ஏன் அந்த எண்ணமே வருவது இல்லை என்று ஆர்மிக்காரர்கள் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











