வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் வேண்டுமா?: அனிருத் சொல்வதை கேளுங்க

By Siva

Recommended Video

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் வேண்டுமா?: அனிருத் சொல்வதை கேளுங்க

சென்னை: ஆக்ட் ஸ்ட்ரீம் டிவி 4கேவை பரிந்துரை செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

Wanna have theatre experience at home?: Anirudh recommends ACT Stream TV 4K

இது தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அவர். இந்நிலையில் அவர் பிரபல பிராட்பேண்ட் ஆபரேட்டரான ஆக்ட் ஃபைபர்நெட்டின் ஆக்ட் ஸ்ட்ரீம் டிவி 4கேவுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை அனிருத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்ட் ஸ்ட்ரீம் டிவி 4கே (ACT Stream TV 4K) என்பது ஒரு ஆண்டிராய்ட் டிவி பாக்ஸ் ஆகும். அதை நம் வீட்டில் உள்ள டிவியில் பொருத்தினால் அது ஸ்மார்ட் டிவியாகிவிடும்.

இந்த ஆக்ட் ஸ்ட்ரீம் டிவி 4கேவின் விலை ரூ. 4, 499 மட்டுமே. இந்த ஆக்ட் டிவி சாதன பெட்டி டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு பெருநகரங்களில் மட்டும் தற்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டிராய்டு டிவிகள் போன்று இல்லாமல் இந்த ஆக்ட் பாக்ஸ் மூலம் நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்தலாம். நெட்ஃபிளிக்ஸ் தவிர்த்து ஹூக், ஜீ5, ஹாட்ஸ்டார், சோனி லைவ் உள்ளிட்டவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

இந்த புதிய வசதிக்கு தான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அனிருத். 4கே ரிசொலுஷன், டால்பி சவுண்டு இருப்பதால் வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் கிடைக்கும் என்கிறார் அனிருத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X