அரசியல் பேசும் விஜய், ஆனால் இது வேற அரசியல்: தளபதி 63 மாஸ் அப்டேட்
Recommended Video

சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 63 படம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தற்போதைக்கு தளபதி 63 என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் விஜய் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.
இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதிர்
தளபதி 63 படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடிக்கிறாராம் கதிர். விஜய் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்று தெரிய வந்துள்ளது. படத்தின் தலைப்பு விஜய் கதாபாத்திர பெயருடன் தொடர்புடையதாம். தலைப்பு மாஸாக இருக்குமாம்.

அரசியல்
இந்த படத்திலும் விஜய் அரசியல் பேசுகிறார். கால்பந்தாட்ட விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறாராம். அப்படி என்றால் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிறப்பு பயிற்சி
தளபதி 63 படத்தில் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்காக கால்பந்து விளையாட சிறப்பு பயிற்சி எடுத்துள்ளாராம். நட்பு, காதல், ஆக்ஷன், பழிவாங்குதல் என்று படம் பரபரப்பாக இருக்குமாம்.

சன் டிவி
தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஜய் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











