நானும் காதலித்திருக்கிறேன்: ஆண்ட்ரியா

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா அன்னாயும் ரசூலும் என்ற படம் மூலம் மாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக வருகிறார். அவரே மலையாளத்தில் டப்பிங்கும் பேசியுள்ளார். அன்னா என்ற அந்த கதாபாத்திரம் தன்னுடன் ஒத்துப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
காதலின் அடுத்த பரிமாணம் தான் திருமணம். நானும் ஒரு காலத்தில் காதலித்துள்ளேன். எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே செய்வேன். என்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும். என் வேலையை மட்டும் பார்ப்பவள் நான். எனது அம்மாவின் பிறந்தநாளுக்கோ அல்லது என் நாயின் பிறந்தநாளுக்கோ பேட்டி கொடுப்பதில் ஆர்வமாக இல்லை. எனது சொந்த வாழ்க்கை என்னுடைய தனிப்பட்ட விஷயம்.
காதலிக்க, திருமணம் செய்ய ஒருவரை தேடி அலைய மாட்டேன் என்றார்.
ஆண்ட்ரியா கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











