ரஜினியோட நடிக்கணுமாம் இனியாவுக்கு!

By Shankar

எப்படியாவது ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்ம.

பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமானவர் இனியா. வாகை சூடவா, மவுன குரு போன்ற படங்கள் மூலம் நல்ல நடிகையாக அறியப்பட்டார். ஆனால் திடீரென அவர் ராம்கிக்கு ஜோடியாக நடித்தார் மாசாணி படத்தில்.

இப்போது முன்னணி நடிகை வரிசையிலிருந்து பின்னக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நகைக்கடை திறப்பு

நகைக்கடை திறப்பு

சமீபத்தில், ஈரோட்டில் ஒரு தனியார் நகைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் இனியா. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, "தற்போது தமிழில் ‘புலிவால்', ‘நினைத்தது யாரோ' உள்பட 5 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்தும் வருகிறேன்.

ஆக்ஷன் படங்களில்...

ஆக்ஷன் படங்களில்...

நடிகை என்ற அந்தஸ்தை எனக்கு கொடுத்தது, தமிழ் சினிமாதான். அதை என்றும் மறக்க மாட்டேன். ஆக்ஷன் படங்களில் எனக்கு நடிப்பது மிகவும் பிடிக்கும். ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்க ஆசைப்படுகிறேன்.

பாரதிராஜா படத்தில்...

பாரதிராஜா படத்தில்...

பாரதிராஜா படத்தில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் இல்லை. அமீர் அந்த படத்தில் இருந்து வெளியேறியதால் படத்தின் போக்கே மாறி விட்டது. இதனால் நான் படத்தில் இருந்து விலக வேண்டியதாயிற்று. தமிழில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லோருடனும் நடிக்க ஆசைப்படுகிறேன்.

ரஜினி படத்தில்

ரஜினி படத்தில்

சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிகைகளில் பானுப்பிரியா, ஸ்ரீதேவி, சிம்ரன் போன்றோரை பிடிக்கும். எனக்கு யாரும் போட்டி இல்லை. நானேதான் எனக்குப் போட்டி.

கவர்ச்சி ஓகே

கவர்ச்சி ஓகே

கவர்ச்சியாக நடிக்கும் சூழ்நிலை வந்தால் நான் நடிப்பேன். ஆனால் சில நடிகைகள் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போகப்போக டூ பீஸ் உடைகளில் நடிக்கிறார்கள். நான் அப்படியல்ல. கதைக்கேற்ற மாதிரி என்னை மாற்றிக் கொள்வேன். எனவே அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன் என கூறமாட்டேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X