”என் வாழ்க்கை படமாகினால் தீபிகாதான் நடிக்க வேண்டும்”- சானியா மிர்சா வேண்டுகோள்!

By Mayura Akilan

டெல்லி: இந்தியாவில் பிரபல டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அப்படி படமாக்கப்பட்டால் தனது கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேசிய குழந்தைகள் திரைப்பட விழாவில் இதுபற்றிய தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் சானியா மிர்சா தெரிவித்தார்.

என்னைப் பற்றிய விஷயங்கள்:

என்னைப் பற்றிய விஷயங்கள்:

அதில், "என்னை பற்றி ஒரு திரைப்படம் வெளியாவதை நான் விரும்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நான் விரும்புவதில்லை.

எனக்கு விருப்பமில்லை:

எனக்கு விருப்பமில்லை:

என் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க என்னிடம் அனுமதி கேட்டு வந்த பல டைரக்டர்களிடம் நான் மறுப்பு தெரிவித்திருக்கிறேன்.

தீபிகாதான் நடிக்க வேண்டும்:

தீபிகாதான் நடிக்க வேண்டும்:

ஆனால், ஒருவேளை எதிர்காலத்தில் எனது மனதை நான் மாற்றிக் கொள்வேனா என்று எனக்கு தெரியாது. அப்படி எனது வாழ்க்கை திரைப்படமானால் அதில் எனது கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

சுயசரிதையில் “பிஸி”:

சுயசரிதையில் “பிஸி”:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானிய மிர்சா தற்போது தனது சுயசரிதையை எழுதி வருவதில் பிஸியாக உள்ளார்.

அனுபவங்களின் பகிர்வு:

அனுபவங்களின் பகிர்வு:

இதுவரை 26 அத்தியாயங்களை எழுதி முடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "எனது அனுபவங்களை முடிந்த வரையில் இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

எழுத வேண்டியது இன்னும் உள்ளது:

எழுத வேண்டியது இன்னும் உள்ளது:

என்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை அதில் கொடுத்துள்ளேன். 2012 வரையிலான எனது வாழ்க்கையை இதுவரை பதிவு செய்து முடித்திருக்கிறேன். இன்னும் சில அத்தியாயங்களை எழுதி முடிக்க வேண்டியுள்ளது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X