Don't Miss!
- Sports 4,4,6,4,6,6.. ஒரே ஓவரில் 30 ரன்கள்.. வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கை பதம் பார்த்த 22 வயது டெல்லி வீரர்!
- News "சொந்தமாக கார் இல்லை.. ரூ.15 லட்சத்திற்கு கடனும் இருக்கு.." அமித் ஷா மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
900 கி.மீ., ராஷ்மிகா மந்தனாவை காண தேடி அலைந்த ரசிகர்.. அந்தவொரு காரணத்தால் பார்க்க முடியாத சோகம்!
பெங்களூரு: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர் ஒருவர் சுமார் 900 கி.மீ., சுற்றித் திரிந்து நடிகையை காண முயற்சித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.
கர்நாடகவில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
வீட்டிலேயே இருங்க…வீடு தேடி நான் வரேன்… சோனுசூட் சூப்பர் மார்க்கெட்!
டோலிவுட்டில் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேஷ்னல் க்ரஷ்
டோலிவுட்டில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலமாக இந்தியளவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலேரு நீகெவரு படத்திலும் இவர் தான் நாயகி. சமீபத்தில் தமிழில் வெளியான சுல்தான் படத்தில் கலக்கிய ராஷ்மிகா பாலிவுட் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
ஏராளமான ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனாவின் குறும்புத்தனமான க்யூட் நடிப்பால் நேஷ்னல் க்ரஷ் என சமீபத்தில் பெயர் எடுத்தார். நாடு முழுவதும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் ஏராளம்.ராஷ்மிகா மந்தனாவின் குறும்புத்தனமான க்யூட் நடிப்பால் நேஷ்னல் க்ரஷ் என சமீபத்தில் பெயர் எடுத்தார். நாடு முழுவதும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் ஏராளம்.
ராஷ்மிகாவை பார்க்கணும்
இந்நிலையில், தெலங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி எனும் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை காண கூகுள் மேப் துணையுடன் தெலங்கானாவில் இருந்து கர்நாடகாவின் குடகிற்கு நடிகை ராஷ்மிகாவின் வீடு இருக்கும் இடத்திற்கே பயணப்பட்டுள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
900 கிலோ மீட்டர்
தெலங்கானாவில் இருந்து மைசூருக்கு ரயிலில் பயணம் செய்த அந்த தீவிர ரசிகர் பின்னர், கார்கோ ஆட்டோ மூலம் குடகு மலை அருகே உள்ள விரஜ்பேட் எனும் கிராமத்திற்கே சென்றுள்ளார். அங்கே தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழிநெடுகிலும் விசாரித்து
விரஜ்பேட்டில் இறங்கிய ஆகாஷ் திரிபாதி வழிநெடுகிலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடு எங்கே உள்ளது என பலரிடமும் கேட்டு சென்றுள்ளார். அப்போது கிராம மக்கள் சிலருக்கு அவர் மீது சந்தேகம் கிளம்பவே போலீசாருக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளனர்.
ஊரிலேயே இல்லை
உடனடியாக விரைந்து வந்த போலீசார் ஆகாஷ் திரிபாதியை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், கர்நாடகாவில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டிருக்கு, இப்போ ராஷ்மிகா மந்தனா ஊரிலேயே இல்லை மும்பையில் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார் என அந்த இளைஞரிடம் கூறி அவரை சொந்த ஊருக்கே செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.
காதுக்கு எட்டியிருக்கும்
நடிகை ராஷ்மிகா மந்தனாவை காண 900 கி.மீ., பயணம் செய்த ஆகாஷ் திரிபாதியின் பயணம் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்நேரம் மீடியாக்களில் வெளியான செய்திகள் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா காதுகளுக்கு அவரது பயண நோக்கம் எட்டியிருக்கும் சீக்கிரமே தெலங்கானா வரும் போது உங்களை நிச்சயம் சந்திப்பார் என சமூக வலைதளங்களில் ராஷ்மிகா ரசிகர்கள் ஆகாஷுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.