நான் சுயசரிதை எழுதினால் சிலர் எதற்காக பயப்படுகிறார்கள்?: ஷகீலா
சென்னை: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வந்த தன்னை கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர் என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியில் மலையாள திரை உலகை மிரள வைத்தவர் நடிகை ஷகீலா. அவர் தற்போது சுயசரிதை எழுதியுள்ளார். அதில் தனது கசப்பான அனுபவங்கள், பெரிய தலைகளின் மறுபக்கம் ஆகியவை பற்றி எழுதியிருக்கிறாராம்.
இதனால் ஷகீலாவை சுயசரிதை எழுதக் கூடாது என்று மிரட்டுகிறார்களாம். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

கவர்ச்சி நடிகை
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது உடம்பை மறைத்துக் கொண்டு குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொடுத்து கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அதற்காக நான் வருத்தப்படவில்லை என்றார் ஷகீலா.

ஏன் பயப்படுகிறார்கள்?
நான் சுயசரிதை எழுவதால் திரை உலகைச் சேர்ந்த சிலர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை என்று ஷகீலா தெரிவித்தார்.

உதவியும் செய்தனர்
நான் என் வாழ்க்கையைப் பற்றி புத்தகம் எழுதி வெளியிடப் போகிறேன். நான் நடிக்க வந்தபோது எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். சுயசரிதையில் நான் நடக்காத எந்த விஷயத்தையும் எழுதவில்லை என்று ஷகீலா கூறினார்.

அழுது அழுது
என் சுயசரிதையை அழுது அழுது எழுதியுள்ளேன். சுயசரிதை தயாராகியுள்ளது. இதை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடவிருக்கிறேன் என்றார் ஷகீலா.


Click it and Unblock the Notifications











