War 2 Box Office - கூலியை முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் ஓரங்கட்டியதா வார் 2?.. போற போக்கை பார்த்தால் நடந்துடுமோ?

மும்பை: ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் வார் 2. ரஜினிகாந்த நடித்த கூலி படத்துக்கு போட்டியாக நேற்று களமிறங்கியது இப்படம். இதுவும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் முதல் நாளில் அந்தப் படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் ஹிருத்திக் ரோஷன். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் கடந்த 2019ஆம் ஆண்டு வார் படத்தில் நடித்தார். அதில் அவருடன் டைகர் ஷெராஃப், அஷுதோஷ் ராணா, வாணி கபூர் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். சித்தார்த் ஆனந்த் இயக்க அவருடன் சேர்ந்து ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை எழுதியிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

வார் 2: சூழல் இப்படி இருக்க வார் 2 திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கவில்லை. மாறாக அயன் முகர்ஜி இயக்குநராக உள்ளே வந்தார். முதல் பாகத்துக்கு திரைக்கதை எழுதிய ஸ்ரீதர் ராகவனே இந்தப் பாகத்துக்கும் ஸ்க்ரீன் ப்ளே எழுதினார். இப்படத்திலும் அஷுதோஷ் ராணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

War 2 Day 1 Box Office Collection is 52 Crores Rupees
Photo Credit:

படத்துக்குள் வந்தவர்கள்: இதையெல்லாம் தாண்டி இந்தப் படத்தின் மீது இன்னொரு எதிர்பார்ப்பு எழுந்ததற்கு காரணம் ஜூனியர் என்.டி.ஆர். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தால் இந்தியா முழுவதும் அவர் பிரபலமாகிவிட்டார். அவரும் இப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். மேலும் கியாரா அத்வானியும் நடித்திருக்கிறார். கியாரா அத்வானி பிகினியில் வந்த காட்சிகள் பட ரிலீஸுக்கு முன்பே பற்றிக்கொண்டன. ஆனால் அதனை சென்சார் தூக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று ரிலீஸ்: படமானது நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. இப்படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்த் கூலி படமும் நேற்றுதான் வெளியானது. எனவே கூலியா இல்லை வார் 2வா என்ற போட்டி இரண்டு படங்களின் ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலேயே தொடங்கிவிட்டது. தியேட்டரில் நேற்று படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது சுமாரான ரெஸ்பான்ஸையே கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கூலியை விட கம்மிதான்: அதன்படி இப்படமானது முதல் நாளான நேற்று மொத்தம் 52 கோடி ரூபாயை இந்தியாவில் வசூல் செய்திருப்பதாக Sacnilk வலைதளம் கூறியிருக்கிறது. கூலி படத்துக்கு பிரமாண்டமான வரவேற்பு இருந்தது. அப்படியிருந்தும் வசூலில் அப்படத்துக்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது வார் 2. இது ஒருப்க்கம் இருக்க கூலி திரைப்படத்துக்கு நேற்றிலிருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம் வர தொடங்கியிருக்கின்றன. எனவே இனி வரும் நாட்களில் அப்படத்தின் வசூலை வார் 2 விஞ்சினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்றே திரைத்துறையினர் சொல்கிறார்கள்.

ஹிந்தியில் 29 கோடி ரூபாயும், தெலுங்கில் 23 கோடி ரூபாயும் வார் 2 படம் அள்ளியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழில் கூலி ரிலீஸ் காரணமாக வார் 2 வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.முன்னதாக, கூலி நேற்று 65 கோடி ரூபாய் வசூலித்ததாக சாக்நில்க் இணையதளம் தகவல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: coolie war 2 கூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X