War 2 First Review: வார் 2 முதல் விமர்சனம்.. ஹ்ரித்திக் ரோஷன் vs ஜூனியர் என்டிஆர் மோதல் வொர்த்தா?

ஹைதராபாத்: ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகியுள்ள "வார் 2" திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மற்றும் தமிழில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "வார்" படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதில் ஹ்ரித்திக் ரோஷனுடன், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆரின் பாலிவுட் அறிமுகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குத் திரையுலகில் பிரபலமான இவர், தனது முதல் பாலிவுட் படத்திலேயே ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

War 2 First Review in Tamil Hrithik Roshan and Jr NTR faceoff will errupts the theater for sure
Photo Credit:

"வார்" படத்தின் தொடர்ச்சி என்பதால், இந்திய அளவில் இப்படத்திற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் பாலிவுட் அறிமுகம் கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 வயதுக்கு மேற்பட்டோர் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்க்க வேண்டும்.

வில்லனாக ஜூனியர் என்டிஆர்: இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், ஹ்ரித்திக் ரோஷனுடன் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டு, திரைப்படம் சென்சார் முடிந்த பிறகு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

"வார் 2" திரைப்படம் 182 நிமிடங்கள் (3 மணி 2 நிமிடங்கள்) ஓடும். "வார்" படத்தில் ஹ்ரித்திக் மற்றும் டைகர் ஷெராஃபின் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், "வார் 2" மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சீதாராம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சுமார் ₹94 கோடிக்கு வாங்கியுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

War 2 First Review in Tamil Hrithik Roshan and Jr NTR faceoff will errupts the theater for sure
Photo Credit:

தமிழில் வார் 2 படத்துக்கு பெரும் ஹைப் இல்லை. ஆனால், இந்தி மற்றும் தெலுங்கு பெல்ட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினாலே வார் 2 திரைப்படம் 1000 கோடி கிளப்பில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

வார் 2 முதல் விமர்சனம்: இந்நிலையில், வார் 2 படத்தின் முதல் விமர்சனம் என இன்சைட் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. "வார் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் என்றும் அயன் முகர்ஜி ஒவ்வொரு சீனையும் ஆக்‌ஷன் பிளாக் சம்பவமாக மாற்றியுள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஃபேஸ் ஆஃப் மற்றும் அவர்கள் இருவரும் இணைந்து நடனத்தில் செய்துள்ள வார் எல்லாம் வேறலெவலில் இருப்பதாக அலெக்ஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். அவரது ட்வீட் வைரலாகி வருகிறது.

யாருக்கு வெற்றி: கூலி மற்றும் வார் 2 என இரண்டு படங்களுக்கும் இன்சைட் ரிப்போர்ட்டுகள் சூப்பராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள தியேட்டர் ஓனர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே டோலிவுட்டில் மகாவதார் நரசிம்மா வெளியாகி 120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே பாலிவுட் படமான சாவ்வா திரைப்படம் தான் 600 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. கண்டிப்பாக கூலி மற்றும் வார் 2 படங்கள் அந்த படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X