War 2: லோகியின் பொருளை எடுத்து அவருக்கு எதிராகவே இறக்கிய Jr NTR.. வார் 2 படத்தில் மாஸ்டர் பட காட்சி!
சென்னை: உலகம் முழுவதும் பல சினிமாக்கள் மற்ற மொழி சினிமாவில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு எடுக்கப்படுகின்றன, அல்லது அதே படத்தை தழுவி எடுக்கப்படுகிறது. இப்படி தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான, கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சார கண்ணா படத்தின் திரைக்கதையை போலவே திரைக்கதை அமைத்து, அதில் அரசியல் பார்வையோடு படமாக்கி ஆஸ்காரை வென்றது கொரியப் படமான பாராசைட் படம்.
தமிழில், இந்திய அளவில் பல சினிமாக்கள் அதற்கு முந்தைய சினிமாக்களில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளன. அவை தனிக் காட்சிகளாக இருந்தாலும் சரி, மொத்த படமாக இருந்தாலும் சரி, நல்ல முறையில் படமாக்கப்பட்டால் வரவேற்பும் வெற்றியும் கிடைத்துள்ளது. அப்படி மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என விமர்சிக்கப்பட்ட இயக்குநர் அட்லீ, இது தொடர்பாக பேசும் போது கூட, நான் என்னை இன்ஸ்பயர் செய்த படங்களில் இருந்து படம் எடுக்கிறேன் என கண்ணியமாக கூறினார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பாலிவுட் படமான வார் 2 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளியான படமான மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து ஒரு காட்சி வார் 2 படத்தில் அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த காட்சியைப் போலவே எடுக்கப்பட்டுள்ளது.

வார் 2: அதாவது மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் விஜய் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி என இருவரும் மோதிக் கொள்வார்கள். அப்போது இருவரது கரங்களும் நேருக்கு நேராக குத்திக் கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது கதாநாயகன் விஜய் தனது கையில் இருந்த காப்பைக் கழட்டி, வைத்துக் கொண்டு, அதன் மூலம் விஜய் சேதுபதியின் கையை குத்துவார். இதை எதிர்பார்க்காத விஜய் சேதுபதிக்கு காயம் ஏற்படும். வலியால் துடிப்பார். இந்த காட்சி இந்த படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளில் நல்ல காட்சியாக பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் பட காட்சி: மாணவர்களுக்கு விஜய், கல்வி உதவித்தொகை வழங்கும் போது கூட, சில மாணவர்கள் அதேபோல் காப்பை எடுத்துக் கொண்டு மேடையில் விஜய்யை போஸ் கொடுக்கச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இந்நிலையில் இந்த காட்சியை வார் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் சண்டைக் காட்சியில் அப்படியே வைத்துள்ளார் இயக்குநர் அயான் முகர்ஜி. அதாவது இருவரது கைகளும் நேருக்கு நேராக குத்துவதைப் போல, காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் ஜூனியர் என்.டி.ஆர் கையில் நக்கிள் வைத்துக் குத்துகிறார். இதனால் ஹ்ரித்திக் ரோஷனின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிகிறது.

வசூல் எதிர்பார்ப்பு: இந்த காட்சிக்கு ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகிறார்கள். வார் 2 படம் விமர்சன ரீதியாக பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படம் முதல் நாளில் 100 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார் 2 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள கூலி படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











