எல்லோரும் ஓடிட்டீங்க.. பாரதிராஜா அனாதையா போயிருக்காரு.. இமயத்தின் மனைவியிடம் கத்திய கங்கை அமரன்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84வது வயதில் உயிரிழந்தார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் இதன் காரணமாக சோகமடைந்திருக்கிறார்கள். பல ரசிகர்கள் அவரது புகைப்படத்தை தங்கள் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸாக வைத்து துக்கம் அனுசரித்துவருகிறார்கள். இந்நிலையில் நீலாங்கரை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு அருகே அவரது மனைவி வந்த போது கங்கை அமரன் கூறிய விஷயம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
பாரதிராஜா இயக்கத்திலிருந்து ஒதுங்கிய பிறகு நடிப்பில் செம பிஸியாக இருந்தார். ஏகப்பட்ட படங்களில் நடித்துவந்தார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரது மகன் மனோஜ் கடந்த வருடத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மனோஜ் உயிரிழந்ததிலிருந்து பாரதிராஜா இடிந்து போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.மன உளைச்சலில் இருந்த அவரை கங்கை அமரன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தேற்றிவிட்டு வந்தார்கள்.

மருத்துவமனையில் பாரதிராஜா: மேலும் அவருக்கு உடல்நல குறைவு வேறு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நலம் தேறியதால்; மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். நீலாங்கரையில் சகல மருத்துவ வசதிகளுடன் படுக்கையில் இருந்த அவர்; மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலும் இருந்தார்.
உயிரிழந்த பாரதிராஜா: இன்று அதிகாலை அவருக்கு திடீரென மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவு முயன்று பார்த்தும் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக 84வது வயதில் இமயம் தனது மூச்சை நிறுத்திக்கொண்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திய கங்கை அமரன்: இந்நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. அதாவது நீலாங்கரையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தபோது; பாரதிராஜாவின் மனைவி கதறி அழுதபடி வந்தார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த கங்கை அமரன் அவரிடம், "கடைசியில் யாருமே இல்லாமல் ஓடி போயிட்டீங்க.. ஓடி போயிட்டீங்க.. கஷ்டமாக இருக்கிறது. அனாதையாக போயிருக்கிறார்" என கத்தினார். இதை பார்த்து பதறிய ராதிகா உடனே கங்கைக்கு அருகே வந்து அமைதிப்படுத்தினார்.
என்ன நடந்தது?: கங்கை அமரன் அப்படி செய்ததும்,சொன்னதும் பல கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பியிருக்கிறது. இறுதி காலத்தில் பாரதிராஜா தனிமையில்தான் இருக்கிறார். அவருடன் அவரது மனைவியோ, குடும்பத்தினரோ இல்லை என்று சில மாதங்களுக்கு முன்புதான் தகவல்கள் வட்டமடித்தன. அப்படியெல்லாம் இருக்காது என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் இப்போது கங்கை அமரன் இப்படி கத்தியதை வைத்து பார்க்கும்போது ஒருவேளை அதுதான் உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
