twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டினார் என்கிறாரா பிக் பாஸ் காஜல்?

    By Siva
    |

    Recommended Video

    குடிபோதையில் வாகனம் ஓட்டினேனா- காயத்ரி ரகுராம் பரபரப்பு வீடியோ

    சென்னை: காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டினாரா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் காஜல் பசுபதி.

    பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கியதாகவும், அவர் ரூ. 3,500 அபராதம் கட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.

    நான் குடிபோதையில் கார் ஓட்டவில்லை என்று காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்தார். இருப்பினும் அந்த பேச்சு அடங்கவில்லை.

    நெட்டிசன்

    காயத்ரி போலீசில் சிக்கியதாக கூறப்பட்டபோது அவருடன் காரில் இருந்தவர் பிக் பாஸ் புகழ் காஜல் பசுபதி. அதனால் உண்மையிலேயே அன்று இரவு நடந்தது என்ன என்று நெட்டிசன் ஒருவர் அவரிடம் கேட்டார். நெட்டிசனின் கேள்விக்கு காஜல் பதில் அளித்து ட்வீட் போட்டுள்ளார்.

    காயத்ரி ரகுராம்

    லேட்டாகிவிட்டது. அவர் ரத்த பரிசோதனைக்கு வர தயாராக இருந்தார். பணம் கட்டினால் போகலாமா என்று அவர் கேட்டார். அதற்கு போலீசாரும் சரி என்று கூறி பணம் வாங்க எங்களுடன் வந்தார்கள். என்னை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவர் தன் வீட்டிற்கு சென்றார். அவர் குடித்திருந்தால் அவரை தொடர்ந்து கார் ஓட்டவிட்டது போலீசார் தவறு தானே என்று கேட்டுள்ளார் காஜல்.

    போதை

    போதை

    காஜலின் விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்படி என்றால் காயத்ரி சொன்னது பொய்யா? குடிபோதையில் தான் காரை ஓட்டினாரா என்று தெரிவித்துள்ளனர். குடிக்கவில்லை என்றால் எதற்காக பணம் தர முன்வந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நான் குடிக்கவில்லை ஒரு பிரஸ் ரிபோர்ட்டர் குடிபோதையில் சிக்கிவிட்டு என் பெயரை வைத்து செய்தி போட்டுவிட்டார் என்று கூறி வருகிறார் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

    கேள்வி

    கேள்வி

    குடிக்கவே இல்லை என்றால் போலீஸ்காரர் எதற்காக காரை ஓட்ட வேண்டும், எதற்காக ரூ. 3, 500 அபராதம் கட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் கேட்ட நேரத்தில் காஜலின் ட்வீட் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

    English summary
    Bigg Boss fame Kaajal tweeted that, 'It was late already. She was also ready for blood test. She asked if they would let us go if she pays. They said yes & a cop came with us to collect d money. She dropped me & she drove back home.Isn't it wrong on the cops side to let her drive back if she was actually drunk?.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X