'பாகுபலி 2' படத்தை எப்பவுமே இலவசமா பார்க்கணுமா... இங்க வாங்க..!

By Vignesh Selvaraj

சென்னை : ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் 'பாகுபலி 2' படத்தின் தெலுங்கு மொழிப் படம் யூ-ட்யூபில் கடந்த வாரம் தீபாவளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற பெருமையைப் பெற்ற திரைப்படம் 'பாகுபலி 2'. படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை 'நெட்பிளிக்ஸ்' நிறுவனத்திற்கு சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

யூ-ட்யூபில் இருக்கும் 'பாகுபலி 2' படத்தை எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பார்க்கலாம். இந்த ஒரு வாரத்தில் அந்தப் படத்திற்கு 12 மில்லியனுக்கும் அதிகமான வ்யூவ்ஸ் கிடைத்துள்ளது.

பாகுபலி 2

பாகுபலி 2

தெலுங்கில் பிரமாண்டமாக வெளியான 'பாகுபலி 2' யூ-ட்யூபில் இலவசமாகப் பார்க்குமாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகியவற்றை 'நெட்பிளிக்ஸ்' இணையதளத்தில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும்.

இலவசமாக பார்க்கலாம்

தெலுங்குத் திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்த படம் 'பாகுபலி 2' என்பதால் அதை தெலுங்கு ரசிகர்களுக்காக யூ-ட்யூபில் இலவசமாகப் பார்க்கும் வசதியை தயாரிப்பாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை யூ-ட்யூபில் செம தரத்தில் பார்த்து ரசிக்கலாம்.

டிஜிட்டல் உரிமை

டிஜிட்டல் உரிமை

தெலுங்குப் படம் இலவசமாக வெளியாகியிருப்பதால் அல்லாத மற்ற மூன்று மொழிப் படங்களின் டிஜிட்டல் உரிமை 25 கோடிக்கு விற்கப்பட்டது என்றால் அது மிகப்பெரிய விலை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாட்டிலைட் உரிமை

சாட்டிலைட் உரிமை

சமீபகாலமாக சாட்டிலைட் உரிமைகளை விட டிஜிட்டல் உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் தான், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் டிஜிட்டல் உரிமைகளை விற்க ஆலோசனை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X