twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் ஆயிரத்தில் ஒருவன்... கர்ணன்... செம்மீன் இலவச ஷோ

    By Mayura Akilan
    |

    சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சினிமா ரசிகர்களுக்காக சென்னையில் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழைய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

    இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. நான்கு மாநில முதல்வர்களும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்கும் இவ்விழாவில் நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    விழாவின் ஒரு பகுதியாக இன்று முதல் முதல் 24-ந்தேதி வரை சத்யம், உட்லண்ட்ஸ், 4 பிரேம்ஸ் திரையரங்குகளில் காலை 11.30 மணிக்கும், அபிராமி தியேட்டரில் மாலை 6.30 மணிக்கும் இலவசமாக பழைய படங்கள் திரையிடப்படுகின்றன.

    ஆயிரத்தில் ஒருவன், கர்ணன்

    ஆயிரத்தில் ஒருவன், கர்ணன்

    சத்யம் தியேட்டரில் 16-ந்தேதி -ஆயிரத்தில் ஒருவன், 17-ந்தேதி- கர்ணன், 18-ந்தேதி -ரிக்ஷாகாரன், 19-ந்தேதி -அடிமைப்பெண், 20-ந்தேதி -மாயாபஜார் (தெலுங்கு). 21-ந்தேதி -பங்காரத மனுசுய (கன்னடம்), 22-ந்தேதி- செம்மீன் (மலையாளம்), 23-ந்தேதி -ஒலவும் திரவும் (மலையாளம்), 24-ந்தேதி -சங்கொள்ளி ராயண்ணா.

    சிரித்து வாழ வேண்டும், செம்மீன்

    சிரித்து வாழ வேண்டும், செம்மீன்

    உட்லண்ட்ஸ் தியேட்டரில் 16-ந்தேதி மகதீரா (தெலுங்கு), 17-ந்தேதி -சிரித்து வாழ வேண்டும், 18-ந்தேதி -ஆண்டவன் கட்டளை. 19-ந்தேதி: பந்தனா (கன்னடம்), 20-ந்தேதி -சவாலே சமாளி, 21-ந்தேதி -ஜாக்ரி (கன்னடம்), 22-ந்தேதி -செம்மீன் (மலையாளம்), 23-ந்தேதி -கலாட்டா கல்யாணம், 24-ந்தேதி: மாயாபஜார் (தெலுங்கு).

    நாடோடி மன்னன், பருத்தி வீரன்

    நாடோடி மன்னன், பருத்தி வீரன்

    அபிராமி தியேட்டரில் 16-ந்தேதி பாசமலர், 17-ந்தேதி -நாடோடி மன்னன், 18-ந்தேதி -மாயாபஜார் (தெலுங்கு), 19-ந்தேதி -சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்) 20-ந்தேதி -மகதீரா (தெலுங்கு), 21-ந்தேதி -சாட்டை, 22-ந்தேதி -பருத்தி வீரன், 23-ந்தேதி -அரவான். 24-ந்தேதி -அடிமைப் பெண்.

    தெலுங்கு, கன்னடம்

    தெலுங்கு, கன்னடம்

    4 பிரேம் தியேட்டரில் 16-ந்தேதி -பங்காரத மனுஷ்ய (கன்னடம்), 17-ந்தேதி -செம்மீன் (மலையாளம்), 18-ந்தேதி -பாண்டவ வனவாசம் (தெலுங்கு), 19-ந்தேதி -கெளரவம், 26-ந்தேதி -பாண்டுரங்க மஹாத்யம் (தெலுங்கு), 21-ந்தேதி - காவிய மேளா (மலையாளம்), 22-ந்தேதி -மகதீரா (தெலுங்கு), 23-ந்தேதி- சதுவுக்குன்ன அம்மாயிலு (தெலுங்கு) 24ந்தேதி -குண்டம்ம கதா (தெலுங்கு). போன்ற படங்கள் திரையிடப்பட உள்ளன.

    சினிமா ரசிகர்கள் இந்த திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

    English summary
    On the eve of Indian cinema centenary function there have been arranged to view the MGR, Shivaji and other stars' super hit movies for free.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X