மேரி கோம்: அசத்தல் ட்ரெயிலர்.. ஆச்சரியத்தில் பாலிவுட்

By Mayura Akilan

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள 'மேரி கோம்' படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.

ஐந்து முறை 'உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்' பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம். உலக சாம்பியன் போட்டிகளில் ஆறு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவரே.

கடந்த 2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம் கடந்து வந்த பாதை காயங்களும் வலிகளும் நிரம்பியவை.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இத்தகைய சிறப்பு மிக்க வீராங்கனையின் சுயசரிதையே இந்தியில் 'மேரி கோம்' என்ற சினிமாவாக உருவெடுத்துள்ளது. இதில் மேரி கோம் ஆகவே மாறி இருக்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. சஞ்ஜய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படத்தை ஓமங் குமார் இயக்கியிருக்கிறார்.

மேரிகோமின் சாதனை

மேரிகோமின் சாதனை

மணிப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த மேரி கோம், தன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களையும், துன்பங்களையும் தகர்த்து தன் கனவுகளை அடைந்து உலக சாதனை புரிவதாக கதை அமைகிறது.

உடல் மொழி சொல்லும் கதை

உடல் மொழி சொல்லும் கதை

இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவை ஒரு குத்துசண்டை வீராங்கனைக்குரிய கட்டுக்கோப்பான உடலமைப்பில், தடகள வீராங்கனை போல் காணமுடிகிறது.

அர்ப்பணிப்பு உணர்வு

அர்ப்பணிப்பு உணர்வு

பாலிவுட் தேவதைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, மேரி கோம் அவதாரம் எடுக்க மேற்கொண்ட சிரத்தையும் அர்ப்பணிப்பும் ட்ரெய்லரிலேயே தெளிவாகத் தெரிகிறது.

இரும்புப் பெண்ணின் இதயத்தில் காதல்

இரும்புப் பெண்ணின் இதயத்தில் காதல்

சிறு குழந்தையின் கனவில் இருந்து தொடங்கி, சமூகக் கட்டுப்பாடுகள், இன்னல்கள், பயிற்சி, காதல், திருமணம், குழந்தைகள் வறுமை, என ஒரு குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கை நிச்சயம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் இந்தப் படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்த ட்ரெய்லர்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

திரைப்பட உலகில் ஒரு நடிகையை இன்னொரு நடிகை பாராட்டுவது அரிது. மேரிகோம் படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் ஆகியவற்றைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். அனுஷ்கா ஷர்மா, அலியா பட், பிபாஷா பாஷூ, ப்ரீத்தி ஜிந்தா, மாதுரிதீட்சித் என பலரும் பிரியங்காசோப்ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்து

ரசிகர்களுக்கு விருந்து

மேரி கோம் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்திய சினிமாவில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து வந்துள்ள சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மேரிகோம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெரும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X