வெளியிட்ட வேகத்தில் பரபரக்கும் கமலின் உத்தம வில்லன் டீஸர்: நீங்க பார்த்தாச்சா?

By Siva

சென்னை: கமல் ஹாஸன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தின் புதிய டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

கமல் ஹாஸன் தனது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமியுடன் சேர்ந்து படத்தை கமல் தயாரிக்கிறார். படத்திற்கு கிப்ரான் இசை பணியை கவனிக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் இயக்குர் சிகரம் கே. பாலச்சந்தரின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விசில்

விசில்

தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டும், உற்சாகமாக குதித்துக் கொண்டும் இருப்பது போன்று டீஸர் துவங்குகிறது.

கே.பி.

கே.பி.

ரசிகர்களிடம் இருந்து நகரும் கேமரா திரைக்கு செல்கிறது. அங்கு ரமேஷ் அரவிந்த் போர்டை டாப் செய்ய கே. பாலச்சந்தர் நிற்கிறார்.

தெய்யம்

தெய்யம்

பாலச்சந்தரை அடுத்து தெய்யம் மாஸ்க் போட்ட பல நடிகர்கள் வருகிறார்கள்.

ஜெயராம்

ஜெயராம்

டீஸரில் பாலசந்தர், ஜெயராம், ஆன்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டவர்கள் வரிசையாகத் தோன்றி உத்தம வில்லன் என்கிறார்கள்.

மால்

மால்

இறுதியில் கமல் ஹாஸன் வெள்ளை நிற கோட் சூட்டில் மால் ஒன்றில் நின்று அங்கிருக்கும் கூட்டத்தை நோக்கி கையை அசைப்பதுடன் டீஸர் முடிகிறது.

ஹிட்

ஹிட்

டீஸர் வெளியிடப்பட்ட உடனேயே இணையதளத்தில் ஹிட்டாகியுள்ளது. அதை பலரும் பார்த்துள்ளனர், பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X