அஜித் ரசிகர்களுக்கு வந்த சோதனை! GBU ரிலீஸ்க்கு முன்னே பங்கம் செய்த திவாகர்! ஜனநாயகனுக்கு என்ன காத்திருக்கோ

சென்னை: இணையம் பலரை பிரபலமாக மாற்றிவிட்டுள்ளது. அதில் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர்களில் திவாகர் மிகவும் முக்கியமானவர். மனநல மருத்துவரான இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருப்பதால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இது பலரது கவனத்தை ஈர்த்ததால், இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசரில் இடம் பெற்ற அஜித்தின் காட்சிகளை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இதனை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வாட்டர்மெலன் திவாகர் என இவருக்கு புனைப்பெயர் எல்லாம் இணையவாசிகள் வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். வாட்டர்மெலன் திவாகர் பெரிய பெரிய ஸ்டார்களுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த அல்லது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காட்சிகளை ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார். அவருக்கு வாட்டர்மெலன் திவாகர் என பெயர் வாங்க காரணமே, கஜினி படத்தில் சூர்யா அசினுடன் இணைந்து தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீல்ஸாக பதிவிட்டு பகிர்ந்ததில் இருந்துதான். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 2.36 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.

Watermelon Divakar Reels Video Trolls Ajith Kumar Good Bad Ugly Teaser Scenes

அதற்கு முன்னர் பல வீடியோக்களை திவாகர் பகிர்ந்து இருந்தாலும், இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வீடியோ என்றால் அது, கஜினி பட காட்சிதான். அதன் பின்னர் இவரது வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. வரவேற்பையும் பெற்றது. இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நடிப்பு அரக்கன் என்றும் பெயர் சூட்டினார்கள். இப்படியான நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படக் காட்சியை ரீல்ஸ் பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

Watermelon Divakar Reels Video Trolls Ajith Kumar Good Bad Ugly Teaser Scenes

குட் பேட் அக்லி: அதாவது, அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள படம். இந்த படத்தின் டிரைலர் நேற்று அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் டீசரில் இருந்து சில காட்சிகளை குறிப்பாக அஜித்குமார் பேசிய வசனங்களை மட்டும் வெட்டி, இணைத்து அதனை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அது இணையவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், கலாய்த்து வருகிறார்கள்.

Watermelon Divakar Reels Video Trolls Ajith Kumar Good Bad Ugly Teaser Scenes

புலம்பல்: குறிப்பாக இந்த வாட்டர் மெலன் ஸ்டாரை யாராவது கம்முனு இருக்கச் சொல்லுங்கடா என அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். குறிப்பாக அஜித்தை பார்த்து இவர் செய்யும் ரிலீஸ்கள் இணையவாசிகளுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் இவ்வாறு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஜனநாயகன்: வாட்டர்மெலன் திவாகரின் இந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்களுமே அதிர்ச்சியில் உள்ளார்கள். காரணம், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்திற்கே இந்த அளவுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார் என்றால், விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திற்கு என்ன காத்திருக்கிறதோ என கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள், இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X