முத்தமழை வெர்ஷன்களை விடுங்க.. விண்வெளி நாயகாவுக்கு வாட்டர் மெலன் திவாகர் வெர்ஷனைப் பாருங்க.. முடியல!
சென்னை: இப்போதுதான் தக் லைஃப் படம் கொடுத்த அடியில் இருந்து கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டு இருப்பார். அதற்குள் அவருக்கும் தக் லைஃப் டீமிற்கும் டஃப் கொடுப்பதைப் போன்ற பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தியுள்ள வாட்டர்மெலன் திவாகர் தனது வெர்ஷனில் விண்வெளி நாயகா பாடலை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் திவாகரை கலாய்த்து வருகிறார்கள்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி, கமல்ஹாசன், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, அசோக் செல்வன், பக்ஸ் பகவதி பெருமாள், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 5 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தக் லைஃப். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக தோல்வி படமாக மாறியது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்துக்கு மொத்தம் 9 பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரகுமான். அதில் படத்தில் இடம்பெறாத பாடலான காலைக் கனவினில் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் ரசிகர்கள் மத்தியில் படத்தில் இருந்து மற்ற சில பாடல்களுக்கும் தனி வரவேற்பு இருந்தது. அப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல் விண்வெளி நாயகா பாடல்.
இந்த பாடலை படத்தின் போஸ்ட் க்ளைமேக்ஸில் வயல் வெளியில் கமல்ஹாசனை நடக்கவிட்டு விண்வெளி நாயகா என்ற பாடலை ஒலிக்கவிட்டு எண்ட் டைட்டில் கார்ட் போட்டு முடித்துவிட்டார்கள். ஏற்கனவே காலை கனவில் பாடல் படத்தில் இல்லை என்ற ஆதங்கத்தில் இருந்த ரசிகர்கள், இந்த பாடலை எண்ட் டைட்டில் கார்ட்க்கு பார்த்துவிட்டு ஓவர் அப்செட் ஆகி விட்டார்கள்.

இணையவாசிகள்: ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் பாடல்கள் இணையத்தில் பலரும் ரிலீஸ் செய்து வெளியிடுவார்கள். அதுவும் அந்த பாடலில் என்ன மாதிரியான நடன அசைவுகள் உள்ளதோ அதேபோல ரிலீஸ் செய்து வெளியிடுவார்கள். அப்படி சமீபத்தில் மிகவும் ரீச் ஆன பாடல் என்றால் ரெட்ரோ படத்தில் இடம் பெற்ற கனிமா பாடல். விண்வெளி நாயகா பாடலைப் பொறுத்தவரையில் உலக நாயகனையே வயக்காட்டில் நடக்க வைத்துவிட்டார் மணிரத்னம்.
வாட்டர் மெலன் திவாகர்: எனவே இந்த பாடலை ரிலீஸ் செய்து வெளியிட்டுள்ள வாட்டர்மெலன் திவாகர் தனது வழக்கமான அட்ராசிட்டியை களமிறக்கி விட்டுள்ளார். அதாவது கையில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டும், காரை மிகவும் கஷ்டப்பட்டு இயக்குவது போலவும், கோட் சூட் போட்டுக் கொண்டு நடந்து வருவது போலவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் விண்வெளி நாயகனுக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கமெண்ட்ஸ்: மேலும் சில இணையவாசிகள், " ஒரே ஒரு வாட்டர் மெலன் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாத்தியா? எனவும், சிவகார்த்திகேயன் துப்பாக்கியை உங்க கையில கொடுத்துட்டாரு போலயே எனவும், ஏன் நண்பா காரில் பவர் ஸ்டேரிங் இல்லையா பல்லை கடித்துக் கொண்டு திருப்புகிறீர்களே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











