மைக்கை கழற்றி கொடுத்துட்டு போ.. உன்னை கொஞ்சுவாங்களா.. வாட்டர் மெலன் ஸ்டாரை வைத்து செய்த தொகுப்பாளர்
சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டு திவாகர் என்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் பேட்டிகள் கொடுத்துவருகிறார். மேலும் ஏஸ் படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்தார். இது ஒருபக்கம் இருக்க அவர் செய்யும் செய்கைகள் எல்லாம் கடுமையான விமர்சனத்தையும், ட்ரோலையும் சந்திக்கக்கூடியவை. இந்நிலையில் திவாகரை தொகுப்பாளர் ஒருவர் லெஃப் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.
ரீல்ஸ்களுக்குள்ளும், மீம்ஸ்களுக்குள் அடங்கி போயிருக்கிறது உலகம். கோமாளித்தனமாக எதையாவது செய்து பிரபலமடைந்துவிடலாம் என்று ஒரு படையே கிளம்பியிருக்கிறது. அந்தப் படையில் ஒருவர்தான் மதுரையை சேர்ந்த திவாகர். அடிப்படையில் பிசியோதெரபிஸ்ட்டான இவர்; சினிமாவிலும், மக்கள் மத்தியிலும் எப்படியாவது பிரபலமடைந்துவிட வேண்டுமென வீடியோக்களை போட்டுவந்தார்.
வாட்டர் மெலன் ஸ்டார்: அந்த வீடியோவில் ஒன்றுதான் கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி பழத்தை சாப்பிட்டுக்கொண்டே தனது உதவியாளர்களை போய்விடுங்கள் என்ற சீனை நடித்து வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவுக்கு பிறகு அவர் தன்னைத்தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைத்துக்கொள்கிறார். மேலும் தனுஷ் 3 படத்தின் க்ளைமேக்ஸில் நடித்தது, கர்ணன் படத்தில் சிவாஜி இறக்கும் சீன் என அனைத்தையும் கோமாளித்தனமாக நடித்துக்கொண்டிருந்தார்.
சூரியை வம்புக்கிழுத்த திவாகர்: சரி அவர் செய்வது எல்லாமே ஜோக்கர்தனமாக இருக்கிறது என்று பலரும் கடந்து போனார்கள். ஆனால் ஒருகட்டத்தில் பேட்டி கொடுத்த திவாகர், "என்னிடம் இருக்கும் திறமைக்கு நான் சின்ன ரோல்களில் எல்லம் நடிக்கமாட்டேன். நன் அந்த லெவல் கிடையாது. நான் பெரிய படிப்பு படித்திருக்கிறேன். சூரி அண்ணாவுக்கோ படிப்பு என்பது இல்லை. அதனால் அவர் சினிமாவில் பெயிண்ட் அடிப்பது மாதிரியான வேலைகளை செய்தார்.

கடும் கண்டனங்கள்: அப்படி வேலைகள் செய்து சின்ன ரோல்கள் செய்து மேலே வந்தார். ஆனால் நான் ஏற்கனவே பெரிய வேலையில் இருக்கிறேன். அதை விட்டுவிட்டு 500, 1000 ரூபாய் பணத்துக்காக நடிக்கமாட்டேன். திறமையை நான் காட்டிவிட்டேன். கடவுளும், கலைத்தாயும், மக்களும் என்னை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வார்கள்" என்றார். அவரது இந்தப் பேச்சு கடுமையான கண்டனங்களை பெற்றது.
வைத்து செய்த தொகுப்பாளர்: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிக்க வந்தார் திவாகர். அப்போது அவர், 'நான் வாட்டர் மெலன் ஸ்டாராக உருவாகிவிட்டேன். மக்கள் செல்வாக்கு இருக்கிறது' என கூறினார். அதற்கு அந்தத் தொகுப்பாளரோ, 'நீங்களே இப்படி நினைத்துக்கொள்கிறீர்களா?.. நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத விஷயங்களை நினைத்து கனவு வாழ்க்கையில் வாழ்வார்கள்' என கூறினார்.
மைக்கை கொடுத்துட்டு போ: அதற்கு காண்டான திவாகர், பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு எழுந்து சென்றார். ஆனாலும் விடாத தொகுப்பாளர், 'என்னாச்சு.. வாருங்கள் நெகட்டிவ்வாக கேட்கமாட்டேன்' என சொல்ல; திவாகரோ, 'நல்ல் விஷயங்களை கேளுங்கள் என்றுதான் சொல்லி வந்தேன். அவர் வேறு என்னமோ பேசுகிறார். வேறு உலகத்தில் இருக்கிறேன் என சொன்னால் என்ன அர்த்தம்?" என கேட்க; உச்சபட்ச கடுப்பான தொகுப்பாளர், 'எதுவாக இருந்தாலும் பேட்டியில் வந்து பேசுங்கள்.
நீங்கள் கொடுக்கும் கேள்விகளைத்தான் நான் கேட்க வேண்டுமா?' செல்வதாக இருந்தால் மைக்கை கழற்றி கொடுத்துவிட்டு போ. உங்களை அழைத்து வந்து அப்படியே கொஞ்சி அனுப்பிவிட வேண்டுமா?.. நீ எல்லோரையும் உட்கார்ந்துகொண்டு அசிங்கமா பேசுவ, நாங்கள் உன்னை கூப்பிட்டு, 'சிவாஜி மாதிரி பண்ணு, சூர்யா மாதிரி பண்ணுனு சொல்லி; வாட்டர் மெலன் ஸ்டார்னு புகழ்ந்து பேச வேண்டுமா?' என சரமாரி கேள்விகள் கேட்க; ஆளை விட்டால் போதுமென திவாகர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த வீடியோ இப்போது பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











