நீங்க குறுக்க வராதீங்க.. பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதம் செய்த 'வாட்டர்மெலான் ஸ்டார்' திவாகர்!

சென்னை: "என் காதலே" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில், பத்திரிகையாளர்கள் மற்றும் பயில்வான் ரங்கநாதனுடன் 'வாட்டர்மெலான் ஸ்டார்' திவாகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. மேலும், இயக்குநர் மிஷ்கின் குறித்து திவாகர் பேசத் தொடங்கிய நிலையில் தான் இந்த சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மே 1ம் தேதி சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த வாரம் மே 9ம் தேதி தமிழ் சினிமாவில் 9 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

Watermelon star Diwakar quarrel with Bayilvan Ranganathan over Mysskin issue

இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'என் காதலே' திரைப்படமும் இந்த வாரம் 9ம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், அதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அந்த படத்தில் நடித்த 'வாட்டர்மெலான் ஸ்டார்' திவாகருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

என் காதலே: ஜெயலட்சுமி இயக்கத்தில் லிங்கேஷ், திவ்யா தாமஸ், லேயா, மாறன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'என் காதலே' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களிலும் சமீபத்தில் வெளியான மெட்ராஸ்காரன் படத்திலும் துணை நடிகராக நடித்த லிங்கேஷ் 'காலேஜ் ரோடு' படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்: இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்கள் நடிகர்களாக மாறி சினிமாவையே சமீப காலமாக கெடுத்து வருகின்றனர் என நடிகை வடிவுக்கரசி மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் பேசிய நிலையில், தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் இந்த படத்தில் நடிச்சிருக்கேன் என பேசத் தொடங்கிய திவாகர் படத்தைப் பற்றி பேசாமல் மிஷ்கின் பற்றி விமர்சிக்கத் தொடங்கியதும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்ப பிரச்சனை பெரிதானது.

மிஷ்கின் எப்படி சொல்லலாம்: இன்ஸ்டாகிராமில் இருந்து வந்தவர்களுக்கு நடிக்கவே தெரியாது என இயக்குநர் மிஷ்கின் எப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசலாம் என திவாகர் பேசத் தொடங்கியதும் இந்த படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் என பயில்வான் ரங்கநாதன் சொல்ல, அதை எப்படி நீங்க சொல்லலாம். நான் பேசிட்டு இருக்கும் போது குறுக்கே நீங்க வராதீங்க என சொன்னதும், இதுதான் என் வேலை நீங்க படத்தை பத்தி மட்டும் பேசுங்க, உங்களோட சொந்த பிரச்சனைகளை இங்கே பேசுறதுக்கு பிரஸ்மீட் வைக்கல என கண்டித்ததும் வாக்குவாதம் முற்றியது.

பத்திரிகையாளருடன் சண்டை: பயில்வான் ரங்கநாதனுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் சிலர் குரல் கொடுக்க, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, நான் தான் பெரிய ஆள் என்கிட்ட தேவையில்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாது என சொல்லிவிட்டு தன்னோட சிக்னேச்சர் ஸ்டெப் போடுறேன் என வாட்டர்மெலானை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே கஜினி சூர்யா போல பயில்வானை பார்த்து கையசைத்து விலக சொன்னதும் பத்திரிகையாளர்கல் கொந்தளித்து விட்டனர். உடனடியாக படத்தின் பிஆர்ஓ உள்ளே புகுந்து திவாகரை அமைதியாக இருக்கச் சொல்லி அங்கிருந்து வெளியேற்றினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X