பேட்டிக்கு போன இடத்தில் சண்டை..கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்.. அடங்கவே மாட்டாரா?.. கதறுராரே

சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்பவர் திவாகர். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போட்டுக்கொண்டிருந்த அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார்கள். அதனையடுத்து குக் வித் கோமாளிக்கு சென்று பிரச்னையை கூட்டி வந்தார். இப்போது அதுதொடர்பான தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்க சென்றார். அப்போதும் பிரச்னையை இழுத்துவிட்டு வந்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கஜினி படத்தில் ஒரு மாலை இள வெயில் நேரம் பாடலில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் சீனை ரீ க்ரியேட் செய்கிறேன் என சொல்லி ஒன்றை செய்தார் திவாகர் என்பவர். அந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர் தனக்கு தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்டார். அதுமட்டுமின்றி விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். அஜித் ரேஸுக்கு சென்றுவிட்டார். ரஜினி, கமல் கொஞ்ச நாட்களில் ரிட்டையர்டு ஆகிவிடுவார்கள். எனவே தமிழ் சினிமாவை காக்க வந்தவன் நான். நான் ஒரு நடிப்பு அரக்கன் என இஷ்டத்துக்கு பேசி வீடியோவை வெளியிட்டார்.

Watermelon Star Diwakar Sparks Fresh Controversy During YouTube Interview Video Goes Viral
Photo Credit:

பிக்பாஸில் வாட்டர் மெலன்: அந்த வீடியோக்கள் ட்ரோலானாலும் கவலைப்படவில்லை அவர். அவ்வப்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பார். நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டார். அங்கே சென்றும் தனது ஒழுங்கீனமான செயல்களில் போட்டியாளர்களிடம் கண்டனத்தை பெற்றார். திவ்யா கணேஷிடம் அவர் வழிந்த விதமெல்லாம் பார்ப்பதற்கே டூ மச்சாக இருந்தது. போட்டியில் பாதியிலேயே எவிக்ட் ஆகிவிட்டார்.

Also Read
சண்டைனு வந்துட்டா நயன்தாரா டெரர்தான்.. ஒருநாளுக்கு 30 லட்சம் வேண்டும்.. சீக்ரெட் சொன்ன விக்னேஷ் சிவன்
சண்டைனு வந்துட்டா நயன்தாரா டெரர்தான்.. ஒருநாளுக்கு 30 லட்சம் வேண்டும்.. சீக்ரெட் சொன்ன விக்னேஷ் சிவன்

குக் வித் கோமாளி செட்டில் பிரச்னை: பிக்பாஸிலிருந்து வெளியே வந்த அவர்; குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அங்கு தன்னை கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கிவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஆனந்த் மது அருந்திவிட்டு தன்னை அடித்ததாகவும்; விலக்கிவிட வந்த அறந்தாங்கி நிஷா, சுனிதா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவர் புகார் கொடுத்த மூன்று பேரும் காவல் நிலையத்துக்கு வந்தார்கள்.

ஆனந்த் சொன்ன விஷயம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாகாபா ஆனந்த், "செட்டில் ஒரு பெண்ணின் கணவருக்கு முன்பே அந்தப் பெண்ணின் தோளில் கை போடு இத்தனை நாட்கள் நீ உன் கணவரோடு இருந்துவிட்டாய். என்னோடு கொஞ்ச நாள் இருக்கியா?" என கேட்டார். இதெல்லாம் காமெடியா. அத்தனைக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. இவர் மீது செட்டில் இருக்கும் பெண்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்" என்று பல விஷயங்களை போட்டு உடைத்தார். இதன் மூலம் இந்த விஷயத்தில் திவாகரின் உண்மை முகம் வெளியே வந்தது.

மீண்டும் பிரச்னை: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று அவரை பேட்டி எடுக்க அலுவலகத்துக்கு அழைத்திருக்கிறது. இவரும் சென்று பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியின்போது சில விஷயங்களால் இவருக்கும், சேனலை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கையில் மொபைலில் வீடியோ எடுத்த திவாகர், 'என்னை அடிக்கிறாங்க மக்களே. நான் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்லப்போகிறேன்' என கத்தி கூப்பாடு போட்டார். மேலும், கேமராவை எடுத்துக்கொண்டு போகிறேன் என சொல்லி சேனலின் கேமராவை பிடுங்க முயல; அது சேதமடைந்துவிட்டது. இதுதொடர்பான வீடியோதான் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இந்த விஷயத்தை கவனித்த ரசிகர்கள் திவாகரை யாராவது அடக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X