த்ரிஷா, சமந்தா ரேஞ்சுக்கு பெண் தேடும் தர்பூசணி திவாகர்.. கல்யாண ஆசை வந்தாச்சு.. லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே!

சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் பிசியோதரபி மருத்துவர் திவாகர். இவர் சினிமா காட்சிகளை தனது பாணியில் நடித்துக் காட்டுகிறேன் என்ற ஆசையில் வெளியிட்ட வீடியோக்கள் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதனால் வாட்டர்மெலன் திவாகர் என்ற பட்டப் பெயர் அவருக்கு வந்தது. அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

இவரிடத்தில் இருக்கும் பிரச்னையே எதையாவது உளறிக் கொட்டிவிட்டு மாட்டிக் கொண்டு முழிப்பதுதான். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே நடைபெற்றுள்ளது. இப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் எப்போது திருமணம் என்ற கேள்வியைக் கேட்டனர். அடுத்த எந்த மாதிரி பெண் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, த்ரிஷா இல்லையினா சமந்தா மாதிரி பெண் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு கூறியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Watermelon Star Diwakar Wish To Marriage Either Looks Like Trisha or Samantha

திவாகரைப் பொறுத்தவரை மைக்கை பிடித்து யாராவது பேட்டி எடுக்க வந்துவிட்டால் போதும், உடனே 'கர்ணன்' சிவாஜியாகவோ அல்லது '3' பட தனுஷாகவோ மாறி விஸ்வரூபம் எடுத்து விடுகிறார். போகிற போக்கில், "நான்தான் உலகத்திலேயே சிறந்த நடிகன்; என் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பலரும் முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சீரியஸாகக் கூறி அதிர வைக்கிறார்.

தனது நடிப்புத் திறமை பிறவியிலேயே வந்த 'நேச்சுரல்' கிப்ட் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் திவாகர், அந்தப் பேட்டியில் திடீரென சிம்புவாக மாறி நடித்துக் காட்டி அலறவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, தனது திருமணம் குறித்துப் பேசிய அவர், "எனக்குப் பெண் பார்த்து வருகிறார்கள்; திரிஷா, சமந்தா அல்லது தமன்னா ரேஞ்சுக்குப் பெண் அமைந்தால் உடனே கல்யாணம் செய்துகொள்ளத் தயார்" என அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X