‘அய்யா’ கெட்டப்பில் விஜய் சேதுபதிக்கு மெழுகுசிலை!

சீதக்காதி பட புரொமோஷனுக்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்னையில் மெழுகு சிலை வைக்கப்படுகிறது.

Recommended Video

25 நாட்களில் விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி ரிலீஸ்- வீடியோ

சென்னை: சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள அய்யா கதாபாத்திரத்தை மெழுகுச் சிலையாக நிருவ உள்ளனர் படக்குழுவினர்.

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கியவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவரது இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி.'இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

Wax statue of Vijay Sethupathi in express avenue

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், 'அய்யா' என்ற முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.

இம்மாதம் 20ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையே படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்துவது, பாடல்கள் வெளியீடு போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படத்தின் புரோமோசனுக்காக விஜய் சேதுபதியின் 'அய்யா' கதாபாத்திரத்தை சிலையாக வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. நாளை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பேஷன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.

இனி, அங்கு செல்லும் மக்கள் இந்தச் சிலையுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: statue
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X