twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தட்டிக் கேட்கறது உரிமைன்னா, பாராட்டுறதும் நம்ம கடமைதானே...' நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை

    By
    |

    சென்னை: அரசு சரியாக செயல்படுகிற போது பாராட்ட வேண்டியதும் நமது கடமைதான் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Raghava Lawrence | Free House for Transgenders | kanchana | Akshay Kumar | LAXMMI BOMB

    நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இப்போது லக்‌ஷ்மிபாம் என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார்.

    இது அவர் நடித்து தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தின் ரீமேக் இது.

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    இதில் பிரபல இந்தி ஹீரோ அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். திருநங்கை கேரக்டரிலும் அவரே நடிப்பதாக தெரிவித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயின். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தெலுங்கில் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கிலும் ஆடுகளம் கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ்.

    ரஜினிக்கு ஆதரவாக

    ரஜினிக்கு ஆதரவாக

    இதற்கிடையே, ரஜினிக்கு ஆதரவாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், உங்களுக்குத் தெரியும். என் தலைவரைப் போலவே எனக்கும் எந்தத் தேவையும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார். அவா் வழி நடப்பதும், அவா் பாதையைப் பலப்படுத்துவதும் என் கடமை. அதை நிறைவேற்ற களம் இறங்குகிறேன். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    இந்நிலையில் தமிழக அரசை பாராட்டி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உலகையே இன்று பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும்
    கொரோனா வைரஸ் தமிழகத்தில் முழுமையாக பரவி விடாமல் இருக்க, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதமாகவும் தீவிரமாகவும் எடுத்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

    பாராட்ட வேண்டியது

    பாராட்ட வேண்டியது

    பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காதபோது, எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ, அதேபோல, ஒரு விஷயத்தில் அரசு சரியாக செயல்படுகிற போது பாராட்ட வேண்டியதும் நமது கடமை! தமிழக அரசை பாராட்டுகிற அதே நேரம், பொதுமக்களாகிய நாமும் அரசு கூறும், சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Raghava lawrence says,'when we all raising questions to the government when something goes wrong, we also need to acknowledge the good things and convey our thanks to them'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X