கர்ப்பத்தை அறிவிக்க இப்படியா...நெட்டிசன்களை அதிர வைத்த டிவி நடிகை

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர்கள் நடிகை ஷமீரா ஷெரீஃப் மற்றும் நடிகர் சையது அன்வர். இந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் 2019 ல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது விஜய் டிவி,யில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். அத்துடன் பல டிவி நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் தயாரித்தும் வருகின்றனர். ஷமீரா, யூட்யூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார்.

We are no more husband and wife - Pregnant TV actresss video shocks netizens

இந்நிலையில் ஷமீரா யூட்யூப் சேனலில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவின் தலைப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி நாங்கள் கணவன் - மனைவி இல்லை. எல்லாவற்றிற்கும் எப்போதும் முடிவு உண்டு என தலைப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இதனால் பதறிப்போன ரசிகர்கள் பலவிதங்களில் தவறாக யோசித்து, கமெண்ட் செய்ய துவங்கினர்.

ஆனால் வீடியோவை கிளிக் செய்தால், அதில் இனி நாங்கள் கணவன் - மனைவி இல்லை. பெற்றோர் ஆக போகிறோம் என இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலை ஷமீரா தெரிவித்திருந்தார். இந்த தகவலை இன்ஸ்டாகிராமிலும் வித்தியாசமாகவே இந்த ஜோடி பதிவிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற டி ஷர்ட்டில், We are Excited to say என என்ற வாசகத்துடன் ஒருவரும், We have a baby on the way என்ற வாசகத்துடன் போஸ் கொடுத்திருந்தவனர். இந்த தகவலுக்காக இவர்களது ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X