'எனக்கும் கௌரிக்கும் உள்ள உறவு'..... 96 ஆதித்யா பாஸ்கர் சொன்ன க்ளைமாக்ஸ் சீன்!
96 படத்தில் நடித்த ஆதித்யாவும், கௌரியும் காதலிப்பதாக வெளியான செய்திகள் தவறானது.
சென்னை: தனக்கும் கௌரிக்குமான உறவு என்ன என்பது குறித்து 96 படத்தில் நடித்த ஆதித்யா விளக்கமளித்துள்ளார்.
96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும். யதார்த்தமான நடிப்பால் சீனியர்களையே தூக்கி சாப்பிட்டார்கள் இந்த ஜூனியர்கள்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக நேற்று முழுவதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் இன்ஸ்ட்டாகிராமில் ஆதித்யா வெளியிட்ட போட்டோ.

இன்ஸ்ட்டாகிராம் பதிவு
கௌரியுடன் போஸ் கொடுத்து நிற்கும் ஆதித்யா, லவ் மூட் எமோஜிகளுடன் இந்த போட்டோவை பதிவிட்டார். அவ்வளவு தான். இதை பார்த்த எல்லோரும், இருவரும் காதலிப்பதாக நினைத்து செய்தியை பரப்பிவிட்டனர்.

பதிவை நீக்கிய ஆதித்யா
சிறிது நேரத்தில் அந்த போட்டோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டார் ஆதித்யா. ஆனால் மற்றொரு வீடியோவில், "அவ முகத்த பாருங்க... மேரி ஜானு (என்னுடைய ஜானு)இளவரசி தானா? ஆமாம்," என பதிவிட்டுள்ளார்.

காதலை மறுத்த கௌரி
ஆனால் இதனை கௌரி மறுத்துவிட்டார். அவருடைய பதிவில்," நானும் ஆதித்யாவும் காதலிக்கவில்லை. நாங்கள் காதலிப்பதாக உலவும் செய்தியை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். படத்தில் நாங்கள் காதலிப்பது போல் நடித்தோம். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை", என விளக்கமளித்துள்ளார்.

ஆதித்யா விளக்கம்
இந்நிலையில் ஆதித்யாவும் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்," எனக்கும் கௌரிக்கும் காதல் இல்லை. நாங்கள் நண்பர்கள் மட்டுமே. நெருங்கிய நண்பர்கள். நடிகர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். நன்றி", என கூறியுள்ளார்.
ஆதித்யாவின் இந்த பதிவால் நேற்று ஆரம்பித்த இந்த காதல் கதையின் இன்றே க்ளைமாக்சுக்கு வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











