நானும் அமலாபாலும் விவாதத்துக்கு ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மிரளவிட்ட ரத்னகுமார்!

Recommended Video

Aadai Public review | Aadai Review

சென்னை: ஆடை படம் குறித்த விவாதத்துக்கு தானும் அமலா பாலும் தயார் என அப்படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. நடிகை அமலா பால் படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பதால் படம் ரிலீஸாவதற்கு முன்பு பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆனால் படம் ரிலீஸான பின்பு படம் குறித்து பாஸிட்டிவ் கமென்ட்டுகள்தான் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் படத்தை பார்த்த ரசிகர்களும் அமலா பாலின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

விவாதத்துக்கு தயாரா?

விவாதத்துக்கு தயாரா?

இந்நிலையில் ஆடை படம் குறித்து நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் டிவிட்டரில் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடை படம் குறித்து ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இயக்குநராக அல்ல

உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது எனவும், ஆனால் அவை ஒரு நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ அல்ல, சாதாரண பார்வையாளர்களாகவும், ஒரு பெண்ணாகவும், பெண் குழந்தைகளின் தயாகவும்தான் என்று கூறியிருந்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

விவாதத்துக்கு தயார்

இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதில் அளித்துள்ளர். அதாவது ஹாய் மேடம், உங்களது பாராட்டுக்கு நன்றி. நான் எப்போதும் விவாதத்துக்கு தயார். அமலாபாலும் விவாதத்துக்கு தயாராக உள்ளார். நீங்கள் விரும்பினால் அதை வீடியோவாக நாங்கள் பதிவு செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

இயக்குநர் ரத்னகுமாரின் இந்த பதிலுக்கும் அவரது கேள்விக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இதுவரை பதிலளிக்கவில்லை. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X