“வீ ஆர் தி பாய்ஸு.. ஹூ ஹூ ஹூ”.. இத மிஸ் பண்ணிடாதீங்க பிக் பாஸ் ரசிகாஸ்.. அப்புறம் பீல் பண்ணுவீங்க!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீ ஆர் தி பாய்ஸு என்ற பெயரில் விஜய் டிவியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 3யை மிகவும் ஜாலியாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்ல மிகவும் உதவியது பாய்ஸ் கேங் தான். சாண்டி, முகென், தர்ஷன் மற்றும் கவின் ஆகியோர் சேர்ந்து இந்த பாய்ஸ் கேங்கை உருவாக்கினார்கள். அதில் லாஸ்லியாவும் இருந்தார்.
இவர்கள் அனைவரும் தங்கள் குரூப்பிற்கென 'வீ ஆர் தி பாய்ஸு.. ஹூ ஹூ ஹூ.." என உருவாக்கிய பாடம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிக் பாஸ் பாய்ஸ் கேங்
அதோடு ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விட்டுக் கொடுத்துக் கொண்டு, சுயநலமில்லாமல் அவர்கள் நடந்து கொண்டதும் மக்களைக் கவர்ந்தது. சண்டையானாலும் ஒருவருக்கு ஆதரவாக மற்றவர்கள் நின்றது, மகிழ்ச்சியானாலும் அதனை சமமாக பகிர்ந்து கொண்டது என மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது இந்த பாய்ஸ் கேங்.

நெகிழ்ச்சி
அதிலும் குறிப்பாக பிக் பாஸ் பினாலேயின் போது டைட்டில் வென்ற முகெனாகட்டும், இரண்டாம் இடத்தில் வந்த சாண்டியாகட்டும் மறக்காமல் கவினையும், தர்ஷனையும் மேடைக்கு அழைத்து கவுரவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் அவர்கள் நடிக்கவில்லை என அவர்களது உண்மையான நட்பை உலகிற்கு காட்டுவதாக அந்த சம்பவம் அமைந்தது.

வீ ஆர் தி பாய்ஸு
இப்படியாக மக்களின் மனங்களைக் கவர்ந்த இந்த பாய்ஸ் கேங்கை வைத்து விஜய் டிவி, ‘வீ ஆர் தி பாய்ஸு' என்றொரு சிறப்பு நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர். இதில் கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த்தும், ரியோவும் தொகுத்து வழங்குகின்றனர்.

குருநாதா
நாளை மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் அனைவரும் வீ ஆர் தி பாய்ஸு டி சர்ட்டும், குருநாதா டி சர்ட்டும் அணிந்துள்ளனர். நிச்சயம் நிகழ்ச்சி செம ஜாலியாக இருக்கும் என்பது புரொமோவைப் பார்க்கும் போதே தெரிகிறது. மிஸ் பண்ணிடாதீங்க பிக் பாஸ் ரசிகாஸ். அப்புறம் பீல் பண்ணுவீங்க.


Click it and Unblock the Notifications











