ஸாரி தவறா அறிவிச்சுட்டோம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சந்தானத்தின் சர்வர் சுந்தரம் இயக்குனர்

By

சென்னை: சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதியை தவறாக அறிவித்துவிட்டதால், ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், சர்வர் சுந்தரம் படத்தின் இயக்குனர்.

சந்தானம் நடித்துள்ள படம், 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.

பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

உணவே மருந்து

உணவே மருந்து

தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை துபாய் வரை சென்று முடிவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் ஷூட்டிங் நடந்துள்ளது. நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர். தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை துபாய் வரை சென்று முடிவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் ஷூட்டிங் நடந்துள்ளது. நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர்.

பைனான்ஸ் பிரச்னை

பைனான்ஸ் பிரச்னை

படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. அதே தேதியில் சந்தானம் நடித்துள்ள டகால்டி படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் சந்தானம் நடித்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதால் பிரச்னை ஏற்பட்டது.

வெளியாகவில்லை

வெளியாகவில்லை

பின்னர் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சந்தானத்தின் டகால்டி படம், ரிலீஸ் ஆனது. சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று வெளியாகவில்லை. பின்னர் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அன்றும் படம் வெளியாகவில்லை என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டரில் மன்னிப்பு

இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, ரசிகர்களிடம் டிவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். 'படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தவறான அறிவிப்புக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பிரச்னைகள் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். படத்தின் புரமோஷனில் பங்குகொள்ளுமாறு சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்ட நிலையில் பட ரிலீஸ் தள்ளிப்போவது வருத்தம் அளிக்கிறது சிலர் செய்த தவறால் இது நடந்துள்ளது. அதை எதிர்கொள்வோம்' என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படம் இந்த வாரமும் ரிலீஸ் ஆகவில்லை என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X