தாயகம் திரும்பிய அண்ணன் அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள்: ஜூலி
Recommended Video

சென்னை: விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜூலி.
பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்து இந்தியர்களின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து அபிநந்தன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த இந்தியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அபிநந்தன்
அண்ணா உங்களுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் #alwayswithabinanthan என்று ஜூலி ட்வீட் செய்தார். பின்னர் அபிநந்தன் நாடு திரும்பியதை பார்த்து அவரை வாழ்த்தியுள்ளார்.
பாராட்டு
ஜூலியின் ட்வீட்டை பார்த்தவர்கள் ஆயிரம் தான் இருந்தாலும் தமிழச்சிடா என்று பெருமையுடன் தெரிவித்துள்ளனர். ஜூலி என்ன ட்வீட் போட்டாலும் திட்டுபவர்கள் இதை பார்த்து அவரை வாழ்த்தியுள்ளனர்.

பிரார்த்தனை
அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக திரையுலக பிரபலங்கள் பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இம்ரான் கான்
அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது. நன்றி நன்றி என்று இந்தியர்கள் தொடர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











