twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஒருமுறை அல்ல பலமுறை அழைத்தோம்”: என்ஜாயி எஞ்சாமி அறிவு புறக்கணிப்பு? விக்னேஷ் சிவன் விளக்கம்!

    |

    சென்னை: 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் எந்தளவிற்கு ஹிட் அடித்ததோ, அதே அளவிற்கு பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

    தெருக்குரல் அறிவு எழுதிய 'என்ஜாயி எஞ்சாமி' பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் அறிவு இல்லாமல் இந்தப் பாடல் இசைக்கப்பட்டது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

    வெற்றிகரமான 3 வது நாள், 5 வது நாள் என்று விளம்பரம்.. பாக்யராஜ் கிண்டல்! வெற்றிகரமான 3 வது நாள், 5 வது நாள் என்று விளம்பரம்.. பாக்யராஜ் கிண்டல்!

    தெருக்குரல் அறிவும் என்ஜாயி எஞ்சாமி பாடலும்

    தெருக்குரல் அறிவும் என்ஜாயி எஞ்சாமி பாடலும்

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களை விவரிக்கும் விதத்தில், தமிழ் பூர்வக்குடிகளின் இசைப் பின்னணியில் 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் வெளியாகி செம்மையாக ஹிட்டானது. இந்தப் பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, அவரும் தீயும் இணைந்து பாடியிருந்தனர். இதுவரை பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ள இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார், ஏ.ஆர். ரஹ்மானின் மஜா நிறுவனம் வெளியிட்டது.

    செஸ் ஒலிம்பியாட்டில் அறிவு மிஸ்ஸிங்

    செஸ் ஒலிம்பியாட்டில் அறிவு மிஸ்ஸிங்

    இந்நிலையில், 'என்ஜாயி எஞ்சாமி' பாடல், சென்னையில் நடைபெற்று வரும் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பாடப்பட்டது. ஆனால், அதில் அறிவு பங்கேற்கவில்லை. தீயும், கிடாக்குழி மாரியம்மாளும் மட்டும் பாடியிருந்தனர். இதனால் அறிவு பங்கேற்காதது குறித்து பலவிதமான பேச்சுகள் எழுந்தன. அதில், அறிவு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

    தெருக்குரல் அறிவு கொடுத்த விளக்கம்

    தெருக்குரல் அறிவு கொடுத்த விளக்கம்

    இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து அறிவு விளக்கமளித்திருந்தார். அதில், "கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மனஅழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இதுஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. .என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும்." எனக் கூறியிருந்தார்.

    விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது

    விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது

    மேலும், "இந்நாட்டில் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, வலி, வாழ்க்கை, அன்பு, எதிர்ப்பு, இருப்பு என அனைத்தையும் செல்லும் பாடல்கள். இவையனைத்தும் அழகான பாடல்களின் மூலம் உங்களிடம் பேசும். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது" என குறிப்பிட்டிருந்தார்.

    வெடித்தது சர்ச்சை

    வெடித்தது சர்ச்சை

    அறிவின் இந்த பதிவுக்கு பின்னர், 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் சர்ச்சை மிகப் பெரிய அளவில் சோஷியல் மீடியாக்களில் வைரலானது. சந்தோஷ் நாராயணனின் மகளான பாடகி தீக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் யூடியூப்பிலும், தீயின் பாடலில் அறிவு பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி எல்லா இடங்களிலும் தீயே முன்னிலைப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறினர். இதனால், சந்தோஷ் நாராயணனும் ஒரு பெரிய விளக்கம் கொடுத்திருந்தார்.

    விக்னேஷ் சிவன் விளக்கம்

    விக்னேஷ் சிவன் விளக்கம்

    செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்நிலையில், தற்போது அவரும் தனது பங்கிற்காக 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், '"செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒருதடவைக்கு பலமுறை அறிவை அழைத்ததாகவும், ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் பங்கேற்க முடியாது" என சொல்லிவிட்டதாக கூறியுள்ளார்.

    எல்லா ஏற்பாடுகள் ரெடி

    எல்லா ஏற்பாடுகள் ரெடி

    மேலும், "நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயார் என கூறியும், அவர் வரவில்லை" என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அதோடு "நான் அறிவின் ரசிகன். அவர் திறமைசாலி என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் தான் அந்நிகழ்ச்சியில், அறிவு இடத்தில் யாரையும் பாட வைக்கவில்லை.. எங்கள் குழுவுக்கும் அறிவுக்கும் எந்த மனவருத்தமும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

    English summary
    Vignesh Shivan Explained about Enjoy the Enjaami Arivu controversy!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X