வேட்டை மன்னன் Drop-ன்னு நாங்க பேசிக்க மாட்டோம்... அது ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம்!

சென்னை: சின்னத்திரையிலிருந்தே சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்

டாக்டர் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இணைந்து சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்தனர்

இந்த நிலையில் வேட்டை மன்னன் படத்தை நாங்க Drop-ன்னு சொல்லிக்கவே மாட்டோம் என சிவகார்த்திகேயன் நெல்சன் குறித்து பகிர்ந்துள்ளார்.

நயன்தாராவின் நடிப்பில்

நயன்தாராவின் நடிப்பில்

இயக்கிய இரண்டே படங்களில் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் நெல்சன் திலிப்குமர். கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். நயன்தாராவின் நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. யோகி பாபுவும் காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார். ஒரு பக்கம் போதை பொருள் கடத்தல் மற்றொருபுறம் காமெடி என விருவிருப்பாக இருந்த கோலமாவு கோகிலா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி படமாக ஆனது. அதன் பிறகு தனது நீண்டகால நண்பரான சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் கூட்டணி அமைத்தார் நெல்சன்.

அப்படியே ஆப்போசிட்டாக

அப்படியே ஆப்போசிட்டாக

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர் இந்த நிலையில் இருவரும் டாக்டர் படத்தில் இணைந்தது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அதுவரை தன்னுடைய படங்களில் கலகலப்பான காமெடியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் அப்படியே ஆப்போசிட்டாக பெரிதாக வசனம் பேசாத அமைதியான கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன்

இந்த நிலையில் ஜாக்பாட் அடித்ததுபோல விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் இயக்குனர் நெல்சனின் அறிமுகப் படமாக உருவாக இருந்தது வேட்டை மன்னன். சிம்பு நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வித்தியாசமான கேங்ஸ்டர் கலந்த டார்க் காமெடியில் உருவாகி வந்த வேட்டை மன்னன் சில காரணங்களால் பாதியிலேயே நின்று போனது.

Drop-ன்னு நாங்க பேசிக்க மாட்டோம்

Drop-ன்னு நாங்க பேசிக்க மாட்டோம்

இன்று வரை இப்படம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் வேட்டை மன்னன் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படம் அதில் டார்க் காமெடி சூப்பரா இருக்கும் இன்று வெளியானாலும் அந்த படம் தமிழ் சினிமாவிற்கு மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும். நானும் நெல்சன் அண்ணனும் வேட்டை மன்னன் Drop-ன்னு நாங்க பேசிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் கூறியுள்ளதைப் பார்த்தால் வேட்டை மன்னன் மீண்டும் உருவாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X