twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது நிஜ பாம்பு இல்லையாம்.. பிளாஸ்டிக்காம்.. சிம்பு பட சர்ச்சை.. இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்!

    |

    சென்னை: நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில், பாம்பு பிடிப்பது போன்ற காட்சி ஒன்று சமீபத்தில் கசிந்து வைரலானது.

    நிஜ பாம்பை வைத்து எப்படி ஷூட்டிங் நடத்தலாம் என உடனே சில சமூக ஆர்வலர்கள் சிம்பு படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

    இந்நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

    ஆமாம் கேபிக்கு என்ன பிரச்சனை.. இன்னைக்கும் அன்சீன்லயே ரியோ சீன்.. 3வது புரமோ எங்க பாஸ்?ஆமாம் கேபிக்கு என்ன பிரச்சனை.. இன்னைக்கும் அன்சீன்லயே ரியோ சீன்.. 3வது புரமோ எங்க பாஸ்?

    சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ

    சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ

    இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தில், பாம்பு பிடிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியின் லைவ் வீடியோ இது தான் என சமீபத்தில் சமூக வலைதளங்களில், நடிகர் சிம்பு நிஜ பாம்பை பிடிப்பது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியாகி வேற லெவலில் வைரலானது.

    வெடித்த சர்ச்சை

    வெடித்த சர்ச்சை

    சிம்பு படம் என்றாலே சும்மாவே சர்ச்சைகள் வெடிப்பது வாடிக்கை தான். ஈஸ்வரன் படத்தில், இந்த பாம்பு மேட்டரை வைத்து ஒரு புதிய சர்ச்சை கிளம்பியது. நிஜ பாம்பை பிடிப்பது போல் எப்படி ஷூட்டிங் நடத்தலாம் என்கிற கேள்வியை எழுப்பி சமூக ஆர்வலர்கள் சிலர் சிம்பு படத்திற்கு எதிராக கிளம்பினர்.

    பிளாஸ்டிக் பாம்பு

    பிளாஸ்டிக் பாம்பு

    இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் இயக்குநர் சுசீந்திரன் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அந்த காட்சி படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், அந்த ஷூட்டிங்கில் நிஜ பாம்பு பயன்படுத்தவில்லை. வெறும் பிளாஸ்டிக் பாம்பை தான் பயன்படுத்தி பின்னர், அதனை 'சிஜி' செய்தோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

    எப்படி கசிந்தது

    எப்படி கசிந்தது

    கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிக்காக அந்த வீடியோ கொடுக்கப்பட்ட இடத்தில் இருந்து அந்த காட்சி எப்படி கசிந்தது என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். மேலும், தமிழக அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின் பற்றித் தான் இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தி உள்ளோம் என்றும் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

    தீபாவளிக்கு டீசர்

    தீபாவளிக்கு டீசர்

    வரும் பொங்கலுக்கு ஈஸ்வரனின் தாண்டவப் பொங்கலாக சிம்புவின் ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. வரும் தீபாவளிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகிறது என்கிற ஹாட் அப்டேட்டை சற்று முன் நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    “We don’t use a real snake for that scene. We use only a plastic one and make it like a real snake with the help of CG”. Director Suseenthiran clarifies the Snake video issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X