தாடிதான் சூப்பர்... கிளீன் ஷேவ் நல்லாயில்லை - விஜய் தேவரகொண்டாவிடம் கெஞ்சல்

சென்னை: விஜய் தேவரகொண்டா நடித்த அத்தனை படங்களிலுமே மிதமான தாடியுடன் காணப்பட்ட நிலையில் தற்போது கிளீன் ஷேவ் செய்து புதிய ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார். கே.எல்.எம் ஷாப்பிங் மால் ஓப்பனிங்கில் அவரது புதிய தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் அவரது ரசிகர்கள். இந்த கிளீன் ஷேவ் லுக் அவருக்கு அவ்வளவு சார்மிங் ஆக இல்லை என்றும் இனிமேல் இது போன்ற முயற்சிகள் செய்ய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம். டியர் காம்ரேட் மற்றும் டாக்ஸிவாலா திரைப்படங்களின் மூலம் டோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா.

we dont want clean shave look Vijay Devarakona

இவரின் நோட்டா மற்றும் டியர் காம்ரேட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் படம் மூலம் அவர் நிச்சயம் மறுபடியும் வெற்றியின் உச்சிக்கு சென்றுவிடுவார் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது விஜய் தேவரகொண்டா இயக்குனர் கிராந்தி மாதவ் இயக்கும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷி கன்னா, கேத்ரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லெய்ட் என நான்கு ஹீரோயின்களோடு நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டவுடன் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த போஸ்டர் காதல் தோல்வியால் தேவதாஸ் போல தாடி வளர்த்து, கொடூரமான கோபமான லுக்கில், ரத்த கரையோடு பார்க்கவே மிக பயங்கரமாக இருந்தது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் மேலும் தூண்டியுள்ளது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள், நிச்சயம் இப்படம் இன்னொரு தேவதாஸ் படமாக வரும் என்று அடித்துச் சொல்கின்றனர்.

சமீபத்தில் அவர் நடித்த அத்தனை படங்களிலுமே மிதமான தாடியுடன் காணப்பட்ட நிலையில் தற்போது கிளீன் ஷேவ் செய்து புதிய ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார். கே.எல்.எம் ஷாப்பிங் மால் ஓப்பனிங்கில் அவரது இந்த புதிய தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் அவரது ரசிகர்கள்.

சில ரசிகர்கள் அவருக்கு அட்வைஸும் செய்துள்ளனர். இந்த கிளீன் ஷேவ் லுக் அவருக்கு அவ்வளவு சார்மிங் ஆக இல்லை என்றும் இனிமேல் இது போன்ற முயற்சிகள் செய்ய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். இனி எல்லா படத்திலும் விஜய் தேவரகொண்டா தாடியுடனே நடிப்பார் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X