பிக் பாஸ், தயவு செய்து இவங்கள மட்டும் போட்டியாளர்கள் ஆக்கிடாதீங்க...
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்கள் தொடர்பாக ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாஸன் தயாராகிவிட்டார். இந்த சீசனின் போட்டியாளர்கள் யார், யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அதே சமயம் யார் வேண்டாம் என்பதிலும் அவர்கள் தெளிவாக உள்ளனர்.

தமிழர்கள்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழர்கள்தான் கலந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்கள்தான் பங்கேற்க வேண்டும். தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர்களை போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

சமூக வலைதளங்கள்
என்னங்கய்யா ரசிகர்கள், ரசிகர்கள் என்கிறீர்கள். பிக் பாஸுக்கு எல்லாம் ரசிகர்கள் இருப்பதை நீங்கள் பார்த்தீர்களா என்று நீங்கள் நினைக்கலாம். என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை கழுவிக் கழுவி ஊத்தினாலும் நேரம் தவறாமல் பார்ப்பவர்களே அதிகம். அவர்களை தான் ரசிகர்கள் என்கிறோம்.

இந்தி
வாவ், இந்திக்கார பொண்ணு பிக் பாஸ் வீட்டிற்கு வந்து தமிழ் கற்கிறது. தமிழில் பேச முயற்சிக்கிறது என்ற பேச்சே வேண்டாம். ஒழுங்காக தமிழகத்தை சேர்ந்தவர்களை போட்டியாளர்கள் ஆக்குங்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

விறுவிறுப்பு
கடந்த சீசன் கொடூர மொக்கையாக இருந்தது. அதனால் இந்த சீசனாவது விறுவிறுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கொடுக்கும் ஸ்க்ரிப்ட்டை சுவாரஸ்யமானதாக கொடுங்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











