twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவம்ங்க விக்ராந்த்... ஒரு ‘ஒட்டகத்தை’ வச்சுக்கிட்டு அவர் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா!

    ஒட்டகத்தை வைத்து படம் எடுப்பதில் நிறைய பஞ்சாயத்து இருக்கிறது என நடிகர் விக்ராந்த் கூறியுள்ளார்.

    |

    சென்னை: பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது என நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

    எம்10 புரொடக்‌ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பக்ரீத்'. விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    பக்ரீத் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் விக்ராந்த், வசுந்தரா, இயக்குனர் ஜெகதீசன் சுபு,பேபி ஸ்ரூத்தீகா, தயாரிப்பாளர் முருகராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    அப்போது பேசிய விக்ராந்த், ஒட்டகத்தை வைத்து படம் எடுப்பதில் நிறைய பஞ்சாயத்துக்கள் இருப்பதாகக் கூறினார்.

    இது புதுசு:

    இது புதுசு:

    இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    இயக்குநர் ஜெகதீசனோடு மீண்டும் வேலை செய்ய வேண்டும். நட்சத்திர அந்தஸ்து இல்லாத இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க தயாரிப்பாளர் முருகராஜ் தான் காரணம். நான் கூட முதலில் தயங்கினேன். ஸ்டார் வேல்யு இல்லாமல் ஏன் அதிக செலவு செய்ய வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டேன். ஆனால் அவர் இந்த கதையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் செலவு செய்தார்.

    தயாரிப்பாளர்:

    தயாரிப்பாளர்:

    இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன் போன்ற பெரிய ஆட்களை படத்திற்கு கொண்டு வந்த, இதனை பெரிய படமாக மாற்றிவிட்டார் தயாரிப்பாளர். இமான் சாரும், ரூபனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்காக வேலை செய்தார்கள்.

    கஷ்டம்:

    கஷ்டம்:

    இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை படப்பிடிப்பிற்கு கொண்டு வருவதற்கு நிறைய சிரமப்பட்டோம். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆனது. ஒட்டகத்தை பார்த்துக் கொள்ள ஒரு குழுவே கூட இருந்தது. இந்த ஒட்டகங்களை இங்கு வர வைப்பது, மும்பையில் இருந்து ஒரு நடிகரை வரவைக்கும் அளவுக்கு பெரிய காரியமாக இருந்தது.

    100 நாள் கால்ஷீட்:

    100 நாள் கால்ஷீட்:

    ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை எனப் பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும்.

    கிராபிக்ஸ் கிடையாது:

    கிராபிக்ஸ் கிடையாது:

    இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்' என இவ்வாறு விக்ராந்த் கூறினார்.

    English summary
    While speaking in the press meet of Bakrid, actor Vikranth said that its very difficult to shoot a movie with a camel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X