விஜய் சம்பளம் இன்னைக்கு 250 கோடி.. விஷ்ணு படத்தில் எவ்ளோ சம்பளம் தெரியுமா? தயாரிப்பாளர் பளிச்!
சென்னை: 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் 1995ம் ஆண்டு விஷ்ணு படத்தில் நடித்திருந்தார். நாளைய தீர்ப்பு, செந்தூரபாண்டி, ரசிகன், தேவா படங்களை தொடர்ந்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான விஷ்ணு படத்தை ஆஸ்கார் மூவிஸ் நேஷ்னல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது.
அந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஷ்ணு படத்தில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், இப்போது, தளபதி விஜய் வாங்கும் உச்சபட்ச சம்பளம் குறித்தும் அவர் பேசியுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளனர்.
கோட் டிரெய்லர் வருது: செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் 2 நிமிட டிரெய்லர் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று விஜய் அறிவித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
250 கோடி சம்பளம்: ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்துக்கு 250 கோடி சம்பளம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதுதொடர்பாக பேசிய விஷ்ணு படத்தின் தயாரிப்பாளர், விஷ்ணு படத்தில் விஜய் வாங்கிய சம்பளம் குறித்தும் பேசியுள்ளார்.
விஷ்ணு படத்தில் விஜய் சம்பளம்: ஷோபா சந்திரசேகர் கதையில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வெளியான விஷ்ணு படத்தில் நடிகர் விஜய் நடித்த போது அவருக்கு அந்த படத்தில் சம்பளமாக 3 லட்சம் வழங்கப்பட்டது. அட்வான்ஸ் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக விஷ்ணு படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். அப்போது, அவர் ரஜினிகாந்த் அளவுக்கு எல்லாம் முன்னணி நடிகராக வருவார் என நினைக்கவில்லை என்றும் ஆனால், நல்ல நடிகராக வருவார் என்று நினைத்தேன். ஆனால், அவருடைய அசுர வளர்ச்சி பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது என்றார். விஷ்ணு படம் வெளியான ஆகஸ்ட் 17ம் தேதி கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











