நடிகை நயன்தாராவுடன் எப்போது திருமணம்? 'லவ் எப்ப போரடிக்குதோ அப்பதான்..' விக்னேஷ் சிவன் நச் பதில்!

By

சென்னை: காதல் எப்போது போரடிக்குதோ அப்போது நயன்தாராவை திருமணம் செய்துகொள்வேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.

'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

இவர்கள் பல்வேறு கோயில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின்போது இருவரும் சில கோயில்களுக்கு சென்று வந்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.
இப்போது கொரோனா லாக்டவுனில் நயன்தாரா பற்றிய செய்தி அவ்வப்போது பரபரப்பை கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாராவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்தி பரவியது. இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்து காட்டமாகப் பதிலளித்து இருந்தார். பின்னர் ஜோசியர் ஆலோசனைப்படி திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் சென்று வந்தபிறகுதான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

லாக்டவுனுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அந்த கோயிலுக்குச் செல்ல இருப்பதாகவும் அங்கு சென்றுவந்த பின் தங்கள் திருமண விஷயம் பற்றி அறிவிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், காதல் எப்ப போரடிக்குதோ அப்பதான் எங்க கல்யாணம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

22 முறை திருமணம்

22 முறை திருமணம்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. மூனு மாதத்துக்கு ஒரு முறை எங்களுக்குத் திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. இதை முடிக்கணும், அதை முடிக்கணும்னு சில பிளான் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.

அஜித் சொல்லி இருப்பார்

அஜித் சொல்லி இருப்பார்

எங்கள் கவனம் முழுவதும் வேலையிலதான் இப்ப இருக்கு. இந்த லவ் எப்ப போர் அடிக்குதுன்னு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது கண்டிப்பா எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். நயன்தாரா பேட்டி வழங்காதது பற்றி கேட்கிறார்கள். அஜித் சார் கூட ஒரு முறை சொல்லி இருப்பார். நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லைன்னு.

வேலைக்கு நேர்மை

வேலைக்கு நேர்மை

நீங்க உங்க வேலையை நம்ப ஆரம்பிச்சுட்டா, பேசுறதை நிறுத்திடுவீங்க. உங்களுக்கு பதில் அந்தப் படம் பேசணும்னுங்கற மூடுக்கு வந்திடறாங்க. இதை தவிர்க்கணும்னு பண்ணலை. இது தேவையான்னு நினைக்கிறாங்க. அவங்க வேலைக்கு நேர்மையாக இருக்காங்க. ஒரு லெமன் ஜூஸ் போட்டோ கூட அதை சரியா பண்ணணும்னு நினைக்கிறவங்க அவ்வளவுதான். இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X