“என்னது.. ரஜினியே கோமாளி பட டிரெய்லரைப் பாராட்டினாரா”.. ஜெயம் ரவி அறிக்கையால் ரசிகர்கள் ஷாக்!
ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் கோமாளி படத்தில் இருந்து நீக்கப்படும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கோமாளி பட டிரெய்லரை பார்த்து ரஜினி பாராட்டியதாக என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி கடந்த சனிக்கிழமை மாலை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

கோமாளி டிரெய்லர்:
அதில் 16 வருடங்கள் ஜெயம் ரவி கோமாவில் இருந்து மீண்டெழுகிறார். அவரது நண்பன் யோகி பாபு, அந்த 16 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஜெயம் ரவிக்கு உணர்த்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிகள் வீடுகளாக மாறியது, கலாச்சாரம், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என இந்த உலகின் மாற்றங்களை கலாய்த்த வண்ணம் இருவரும் பயணிக்கிறார்கள்.

கமல் கோபம்:
டிரெய்லரின் முடிவில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர் கோமாளிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகர் கமல், தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு போன் செய்து, இந்த விவகாரம் குறித்து வருத்தப்பட்டார்.

அறிக்கை:
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்க்கும் காட்சிகள் நீக்கப்படும்' என உறுதியளித்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக அப்படத்தின் நாயகன் ஜெயம் ரவியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் பாராட்டு:
அதில் அவர், ‘தான் மிகப் பெரிய ரஜினி ரசிகன் என்றும், துரதர்ஷட விசமாக ரஜினி ரசிகர்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்துவிட்டதாகவும் வருத்தம்' தெரிவித்துள்ளார். மேலும், கோமாளி பட டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்ததாகவும், கிரியேட்டியை கண்டு பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை மதித்து சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











