மோடி- ரஜினி போஸ்டர்: எங்களுக்குத் தெரியாது, சொல்வதற்கு ஒன்றுமில்லை- லதா ரஜினிகாந்த்

By Sudha

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் இணைத்து போஸ்டர் வெளியிட்டிருப்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்று ரஜினிகாந்த்தின் மனைவி லதா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடந்த மோடி கூட்டத்திற்கு முன்பாக ரஜினியையும், மோடியையும் இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. மேலும் ரஜினியே நேரில் வந்து மோடியைப் பார்க்கப் போகிறார் என்றும் வதந்தி கிளப்பி விட்டனர்.

தமிழக பாஜக தலைவர்களும் தொடர்ந்து ரஜினி, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வாய் வலிக்க பேசி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ரஜினி குடும்பத்திலிருந்து முதல் முறையாக ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

நாங்கள் என்ன சொல்வது- லதா ரஜினி

நாங்கள் என்ன சொல்வது- லதா ரஜினி

ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள்தான் போஸ்டர் போட்டுள்ளனர். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் லதா.

கோச்சடையானில் மட்டுமே கவனம்

கோச்சடையானில் மட்டுமே கவனம்

ரஜினி தரப்பில் சிலர் கூறுகையில் இப்போது ரஜினிகாந்த்தின் கவனம் முழுவதும் கோச்சடையான் படத்தில் மட்டுமே உள்ளது. வேறு எது குறித்தும் அவர் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக அரசியலிலிருந்து அவர் வெகு தூரத்தில் ஒதுங்கியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

15 வருடமாக இழுக்கப்படும் ரஜினி

15 வருடமாக இழுக்கப்படும் ரஜினி

கிட்டத்தட்ட கடந்த 15 வருடங்களாகவே பல்வேறு அரசியல்வாதிகளும் ரஜினியை அரசியல் பக்கம் இழுத்தபடி உள்ளனர். ஆனால் அவர்தான் சிக்கிக் கொள்ளாமல் லாவகமாக தப்பிக் கொண்டிருக்கிறார். பலமுறை அவர் தர்மசங்கடத்திலும் சிக்க நேரிட்டுள்ளது.

படம் வரும்போதெல்லாம்

படம் வரும்போதெல்லாம்

ரஜினியின் புதுப் படம் வரும்போதெல்லாம் கூடவே அரசியலும் கிளம்பி வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது. ரஜினியே நினைத்தாலும் கூட இதைத் தடுக்க முடியாத நிலைதான்.

அரசியல் சார்பவற்றவர் ரஜினி

அரசியல் சார்பவற்றவர் ரஜினி

இதற்கிடையே திமுகவைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறுகையில் ரஜினி அரசியல் சார்பற்றவர் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பாஜகவின் தந்திரத்திற்கு அவர் பலியாகமாட்டார் என்றும் நம்புகிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X