விஷால் 31 படத்தோட படப்பிடிப்பு ஐதராபாத்ல துவங்கிடுச்சாம்... விஷால் மகிழ்ச்சிப் பதிவு
ஐதராபாத் : கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஷால் 31 படத்தின் சூட்டிங் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
ஐதராபாத்தில் இதன் சூட்டிங் துவங்கியுள்ளதாகவும் ஜூலை வரை நீண்ட ஷெட்யூலாக சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் சூட்டிங் துவக்கம்
தற்போது தன்னுடைய 31வது படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் சூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியுள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூலை இறுதிவரை சூட்டிங்
இதுகுறித்த சூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விஷால் 31 படத்தின் சூட்டிங் நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் ஜூலை இறுதிவரை சூட்டிங் நடத்தப்பட்டு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மகிழ்ச்சியளிப்பதாக விஷால் ட்வீட்
மேலும் லாக்டவுன் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் சூட்டிங்கில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். து. பா. சரவணன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. விஷால் பிலிம் பேக்டரி படத்தை தயாரித்து வருகிறது.

சிறப்பான படம்
யுவன் சங்கர் ராஜா படத்தின் இசையை அமைத்து வருகிறார். நேற்று முதல் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், விஷால் வெளியிட்டுள்ள சூட்டிங் ஸ்பாட் வீடியோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் விஷாலிடம் இருந்து அடுத்ததாக சிறப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











