மாநாடு படத்தை பார்த்து தலைவலி வந்துவிட்டது... ரசிகரின் விமர்சனத்திற்கு ரியாக்ட் செய்த வெங்கட் பிரபு

சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு.

இந்தப் படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் படம் குறித்து ரசிகர் ஒருவரின் கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள நடிப்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

100 கோடி ரூபாய் க்ளப்

100 கோடி ரூபாய் க்ளப்

படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது. படத்தை இயக்கிய வெங்கட் பிரபு மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றிப் பெற்றுள்ள இந்தப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

சிம்புவிற்கு சிறப்பான ஏற்றம்

சிம்புவிற்கு சிறப்பான ஏற்றம்

மன்மதன் படத்திற்கு பிறகு இந்தப் படம்தான் சிம்புவிற்கு சிறப்பான ஏற்றத்தை தந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்த படங்களில் அவர் நடித்து வருகிறார்.

அடுத்த படத்தை அறிவித்த டைரக்டர்

அடுத்த படத்தை அறிவித்த டைரக்டர்

இதேபோல வெங்கட்பிரபுவும் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல எஸ்ஜே சூர்யாவிற்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் அதிகமாக வில்லன் கேரக்டர்களில் கமிட் ஆகி வருகிறார். அவரது உடல்மொழி மாநாடு படத்தில் பாராட்டிற்கு உள்ளானது.

தலைவலியை ஏற்படுத்திய மாநாடு

தலைவலியை ஏற்படுத்திய மாநாடு

ரசிகர்களும் விமர்சகர்களும் இந்தப் படத்தை பாராட்டித் தள்ளிய நிலையில், தற்போது படம் தனக்கு தலைவலியை ஏற்படுத்தியதாகவும் ஒரே டயலாக் பயன்படுத்தப்பட்டது தனக்கு அயர்ச்சியை கொடுத்ததாகவும் படத்தின் இடையிலேயே தான் வெளியேறி விட்டதாகவும் ரசிகர் ஒருவரின் கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிடிக்காத படம்

படத்தில் கதையே இல்லை என்றும் டைம் லூப் குறித்து யாரும் தனக்கு சொல்லவில்லை என்றும் கடந்த ஆண்டில் வெளியான படங்களில் மாநாடு மட்டுமே தனக்கு பிடிக்காத படமாக இருந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரேம்ஜி சிரிப்பு எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

பதிலளித்த வெங்கட் பிரபு

பதிலளித்த வெங்கட் பிரபு

இந்த வீடியோவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, இத்தகைய விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு அடுத்த படம் இவருக்கு புரியும்படியும் பிடிக்கும்படியும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நம்ம பார்க்காத விமர்சனங்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X