twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay

    |

    Recommended Video

    சென்னையில் பிடித்த இடம் இதுதான் : Happy Birthday Chennai : Celebrities Wishes

    சென்னை: வந்தாரை வாழவைக்கும் ஊருங்க நம்ம சென்னை. இங்க எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். சென்னைல பேசுற அழகான தமிழ் பாஷை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று வாழ வைத்த சென்னையைப் பற்றி சென்னை தினத்தில் பிரபலங்கள் நெகிழ்ந்து கூறியுள்ளனர். ஈரோட்டில் பிறந்த தனக்கு சென்னை பிடித்தமான ஊர் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்

    சென்னையில எனக்கு பிடிச்ச இடம் பிடிக்காத இடம்னு கிடையாது. எல்லா இடத்துக்கும் நான் போயிருக்கேன். மக்கள் என்ன ரசிச்சிருக்காங்க. என்னோட இதயத்துக்கு ரொம்ப நெருக்கமான இடம்னு சொல்லணும்னா கோடம்பாக்கம் வடபழனி நாகாத்தம்மன் கோவில் தான் என்றார் ரோபோ சங்கர்.

    நான் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்துல அதிகமா செலவழிச்ச இடம் வடபழனி முருகன் கோயில் தான். அங்கதான் நான் ரொம்ப நேரம் உக்காந்து மனச ரிலாக்ஸ் பண்ணுவேன். அப்போ ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை காலையில 5 மணிக்கு என்ன நீங்க வடபழனி கோவில்ல பாக்கலாம். இப்பதான் என்னால அங்க போக முடியல, என்றார் கனல் கண்ணன்.

    பல்டி அடிச்சி பிராக்டீஸ்

    பல்டி அடிச்சி பிராக்டீஸ்

    சென்னையில் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்னு சொல்லணும்னா, அண்ணா சதுக்கத்துக்கு பின்னாடி இருக்குற காலி இடம். ஏன்னா நான் சாதாரண ஸ்டண்ட் மேனா இருக்க சொல்ல, வடபழனியில இருந்து சைக்கிள்லயே அண்ணா ஸ்கொயர்க்கு போயி அங்க தான் நான் தெனமும் பல்டி அடிச்சு பிராக்டீஸ் பண்ணுவேன்.

    பெசண்ட் நகர் பீச் பிடிக்கும்

    பெசண்ட் நகர் பீச் பிடிக்கும்

    அங்க இருக்குற ஜிம்முல எக்ஸர்சைஸ் பண்ணுவேன். திரும்பவும் அங்க இருந்து சைக்கிள்லயே வடபழனிக்கு வருவேன். இது மார்னிங் அப்புறம் ஈவினிங்னு ரெண்டு வேளையும் ரொட்டீனா நடக்கும். அதே மாதிரி பெசண்ட் நகர் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். ஏன்னா, நான் ஸ்டண்ட் மேனா இருந்து ஸ்டண்ட் மாஸ்டரா வளர வளர, எனக்கு ரிலாக்ஸ் பண்றதுக்கு அந்த இடம் தான் ரொம்ப பீஸ்ஃபுல்லா இருக்கும். அங்க இருக்குற பீச்ல கார பார்க் பண்ணிட்டு ஃபிரண்ட்ஸ்களோடு பேசுறதுக்கு அது தான் வசதியா இருக்கும்.

    மனச ரிலாக்ஸ் பண்ணுவேன்

    மனச ரிலாக்ஸ் பண்ணுவேன்

    அதே மாதிரி நான் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்துல அதிகமா செலவழிச்ச இடம் வடபழனி முருகன் கோயில் தான். அங்கதான் நான் ரொம்ப நேரம் உக்காந்து மனச ரிலாக்ஸ் பண்ணுவேன். அப்போ ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை காலையில 5 மணிக்கு என்ன நீங்க வடபழனி கோவில்ல பாக்கலாம். இப்பதான் என்னால அங்க போக முடியல, என்றார் கனல் கண்ணன்.

    வாழ்க்கைய கத்துக்கொடுத்தது

    வாழ்க்கைய கத்துக்கொடுத்தது

    வாழ்க்கைய முழுசா எனக்கு கத்துக்கொடுத்தது என்னோட அரும்பாக்கம் ஜெய் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் தான். நான் நடிக்க வந்த பின்னாடி கூட அந்த ஆட்டோ ஸ்டாண்ட் போர்டுல என்னோட பேர் இருந்திச்சி. இப்பதான் சமீபத்துல என்னோட பேர எடுத்துட்டாங்க.

    மூணு வருஷத்துல எல்லாமே மாறிச்சி

    மூணு வருஷத்துல எல்லாமே மாறிச்சி

    நான் படத்துல வர்ற சீன்கள நடிச்சி காமிக்கும்போது, எல்லாரும் ரசிக்கிறது மாதிரி நடிச்சாங்க. ஆனா பின்னாடிதான் தெரிஞ்சது அவங்க என்ன கிண்டல் பண்ணாங்கன்னு. ஆனா, அதுக்கடுத்த மூணு வருஷத்துலேயே, அதே ஆட்டோ ஸ்டாண்டுல இருந்து வந்த நண்பர்கள், அங்க ஒரு ஃபங்ஸன் இருக்கு வர்றியான்னு கூப்பிட்டாங்க. நானும் போய் கலந்துகிட்டேன் என்றார் போஸ் வெங்கட்.

    வடபழனி நாகாத்தம்மன் கோவில்

    வடபழனி நாகாத்தம்மன் கோவில்

    சென்னையில எனக்கு பிடிச்ச இடம் பிடிக்காத இடம்னு கிடையாது. எல்லா இடத்துக்கும் நான் போயிருக்கேன். மக்கள் என்ன ரசிச்சிருக்காங்க. என்னோட இதயத்துக்கு ரொம்ப நெருக்கமான இடம்னு சொல்லணும்னா கோடம்பாக்கம், அப்புறம் வடபழனியில ராம் தியேட்டருக்கு பக்கத்துல இருக்குற நாகாத்தம்மன் கோயில். அங்க தான் என்னோட மொதல் புரோக்ராம் நடந்துச்சி. நான் குடியிருந்த இடமும் அதுதான். இப்பவும் என்னோட ஒவ்வொரு பொறந்த நாளுக்கும் கல்யாண நாளுக்கும் நான் அங்க கண்டிப்பா போவேன். அந்த கோவிலுக்கும் என்னால முடிஞ்சத செய்யுறேன்.

    சாண்டி ரொம்ப பிடிக்கும்

    சாண்டி ரொம்ப பிடிக்கும்

    எனக்கு புடிச்ச புரோகிராம்னு எதுவும் இல்ல. ஆனா இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிய தொடர்ந்து பாக்குறது இல்லை. அதுக்கான நேரமும் இல்லை. ஆனா, ஆண்டவருக்காகவே (கமல்) நேரம் கிடைக்கும்போது பாத்துகிட்டு வர்றேன். அங்க இருக்குறதுல எனக்கு பிடிச்சதுன்னு சொல்லணும்னா சாண்டிதான். அவர் கண்டிப்பா ஃபைனல் வரைக்கும் இருந்துட்டு வரணும்கிறது என்னோட ஆசை என்றார் ரோபோ சங்கர்.

    ஐ லவ் சென்னை

    ஐ லவ் சென்னை

    நான் பொறந்து வளர்ந்தது ஈரோடு. இருந்தாலும் ஈரோடை விட எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச இடம் சென்னை தான். ஐ லவ் சென்னை. சென்னைல எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும். குறிப்பா நம்ம சென்னை மக்கள், நம்ம அழகான சென்னை தமிழ் பாஷை. ஏன்னா வந்தாரை வாழ வைக்கும் ஊருன்னு சொல்லுவாங்கல்ல. அதனால் தான். என்னை வாழவைக்கும் சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    காதர் நவாஸ்கான் ரோடு

    காதர் நவாஸ்கான் ரோடு

    நுங்கம்பாக்கத்திலே காதர் நவாஸ் கான் ரோடு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்ன அங்க தான் நெறைய ஐஸ்கிரீம் பார்லர், ரெஸ்டாரெண்ட்ஸ் நெறைய இருக்கு. அதே மாதிரி தி.நகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட், அண்ணடா நகர்ல நெறய ரெஸ்டாரெண்ட்ஸ், இன்னும் சொல்லிட்டே போகலாம் என்றார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

    English summary
    I born and grew up with Erode. I thought, Chennai is a lot better for me than Erode. I Love Madras. I love everything in Chennai, said Actress Iswarya Menon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X